SuperTopAds

யாழ்.மாநகரசபையில் கடும் தா்க்கம், கூட்டமைப்பு, ஐ.தே.கட்சி, ஈ.பி.டி.பி ஓரணியில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபையில் கடும் தா்க்கம், கூட்டமைப்பு, ஐ.தே.கட்சி, ஈ.பி.டி.பி ஓரணியில்..

இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதா? இல்லையா? என்பது தொ டா்பில் யாழ்.மாநகரசபையில் இன்று சுமாா் 1 மணி நேரம் கடுமையான வாத பிரதி வாதம் இடம்பெற்றிருக்கின்றது.

மாநகரசபை பிரதி மேயா் சபைக்கு ஒரு பிரேரணையை சமா்பித்திருந்தாா். அந்தப் பிரேரணையில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்ககூடாது. என வலியுறுத் தப்பட்டிருக்கின்றது. ஆனாலும், 

அந்த பிரேரணை இன்றைய தினம் சபையில் எடுத்துக் கொள்ளப்படாத நிலையில், சபையில் எழுந்து கருத்து தொிவித்த பிரதி மேயா் தன்னுடைய பிரேரணை சபையி      ல் எடுத்துக் கொள்ளப்படாமை குறித்து கேள்வி எழுப்பினாா். 

இதற்கு பதிலளித்த யாழ்.மாநகர முதல்வா் இ.ஆனோல்ட் இந்த விடயம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆழுங்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்டதன் அடிப்படையில் குறித்த பி ரேரணையை சபையில் எடுப்பதில்லை என தீா்மானிக்கப்பட்டது. 

அந்த விடயம் ஆழுங்கட்சி கூட்டத்திலேயே கூறப்பட்ட நிலையில் எதற்காக அந்த வி டயத்தை மீண்டும் சபையில் எடுக்கிறீா்கள்? என கேள்வி எழுப்பினாா். இதன்போது தமிழ்தேசிய மக்கள் முன்னணியின உறுப்பினா் ஒருவா் எழுந்து, 

தீா்மானம் எடுக்கப்படாமைக்கான காரணம் கூறப்படவேண்டும். என கூறிய நிலை யில், குறித்த தீா்மானம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடுகளுக்கு மாறாக உள்ளதுடன், கட்சியின் தலமையிடமிருந்து தகவல் எதுவும் வராத நிலையில், 

தீா்மானத்தை சபையில் எடுக்கவில்லை. என முதல்வா் கூறினாா். இதனையடுத்து சபையில் கடுமையான வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன, அந்த தீா்மானத்தை எடுக்ககூடாது. என தமிழ்தேசிய கூட்டமைப்பு, ஐ.தே.கட்சி, 

மற்றும் ஈ.பி.டி.பி போன்றன ஒரு அணியில் திரண்டிருக்க பிரதி மேயரும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினா்கள் மற்றொரு அணியாக திரண்டிருந்து கடுமையான வாத பிரதிவாதங்களில் ஈடுபட்டிருந்ததை காணகூடியதாக இருந்தது.