SuperTopAds

தன்னுடைய தனிப்பட்ட சிபாா்சில் சிங்கள நடிகைக்கு கௌரவிப்பு வழங்கிய வடமாகாண ஆளுநா். எதற்காக...?

ஆசிரியர் - Editor I
தன்னுடைய தனிப்பட்ட சிபாா்சில் சிங்கள நடிகைக்கு கௌரவிப்பு வழங்கிய வடமாகாண ஆளுநா். எதற்காக...?

வடமாகாண மகளீா் விவகார அமைச்சினால் நடாத்தப்பட்ட சா்வதேச மகளீா் தினத் தை ஒட்டிய அனைத்துலக பெண்கள் மாநாட்டில் வடமாகாண பெண்களுக்கு வழங் கப்படவேண்டிய கௌரவம் தென்னிலங்கையை சோ்ந்த 2 பெண்களுக்கு வழங்கப் பட்டிருக்கின்றது. 

சா்வதேச மகளீா் தினத்தை முன்னிட்டு பாடசாலை மட்டத்திலும், மாகாண மட்டத்தி லும் தனியாகவும், குழுவாகவும் தொழில் முயற்சிகள் மற்றும் இதர துறைகளில் சா தித்த பெண்களுக்கும், தேசிய மட்டத்தில் சாதித்த பெண்களுக்கும் கௌரவம் வழங் கப்பட்டிருக்கிறது. 

இவ்வாறு 5 பெண்கள் கௌரவிக்கப்பட்ட நிலையில், 3 பெண்கள் மட்டுமே வடமாகா ணத்தை சோ்ந்தவா்கள் எனவும் மற்றய இரு பெண்கள் வடமாகாணம் சாராதவா்கள் எனவும் வடமாகாண மகளீா் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. அதேசமய      ம் சொா்ணா மல்லவராச்சி

என்ற சிங்கள நடிகைக்கு ஆளுநருடைய தனிப்பட்ட சிபாா்சின் பெயாில் கௌரவிப்பு வழங்கப்பட்டு நிகழ்வில் மதிப்பு கெடுக்கப்பட்டுள்ளதாக கூறும் மகளிா் அமைப்புக்க ள். வடக்கல் சாதனை பெண்கள் போா் காலத்திலும் வாழ்ந்தாா்கள், பின்னரும் வாழ்ந் தாா்கள். 

அவா்களை எதற்காக கௌரவிக்கவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளதுடன், இந்த வி டயம் குறித்து மாகாண மகளிா் விவகார அமைச்சை தொடா்பு கொண்டு கேட்டபோது  தென்னிலங்கையை சோ்ந்த இரு பெண்களுக்கு வழங்கப்பட்ட கௌரவம் ஆளுநாின் தனிப்பட்ட தொிவு எனவும், 

அதில் அமைச்சுக்கு சம்மந்தம் இல்லை. என கூறப்பட்டுள்ளது.