SuperTopAds

கால நீடிப்பே வழங்கப்படவுள்ளது, கால அட்டவணையுடன் வழங்கப்பட்டால் பாிசீலிக்கலாம்..

ஆசிரியர் - Editor I
கால நீடிப்பே வழங்கப்படவுள்ளது, கால அட்டவணையுடன் வழங்கப்பட்டால் பாிசீலிக்கலாம்..

ஐ.நா மனித உாிமை பேரவையில் கண்காணிப்பு என்ற பெயாில் கால அவகாசம் வழ ங்கப்படவுள்ளது. அது கால அட்டவணையுடன் கொடுக்கப்பட்டால் பாிசீலிக்கலாம். எ ன ஈ.பி.ஆா்.எல்.எவ் கட்சியின் தலைவா் சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறியுள்ளாா். 

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது,

இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவே ற்றப்பட்ட தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறி நான்கு ஆண்டுகள் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் வழங்கப்பட்ட காலத்தில் உருப்படியாக அரசு எதையும் செய்யவில்லை.

இந்நிலையில் ஐ.நா ஆணையாளர் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுளளார்.அதில் பல விடயங்களை அவர் சுட்டிக் காட்டியுளளார். சில ஆலோசனைகளையும் கூறியுள்ளார்.அவரது ஆலோசனைகள் வரவேற்கத்தக்கது.

ஏற்கனவே இலங்கை அரசு ஏற்றுக்கொண்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதாக இருந்தால் இனி கால அட்டவனை தயாரிக்கப்பட்டு,அந்த விடயங்கள் எந்தெந்த காலப்பகுதியில் நிறைவேற்றப்படும் என தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கவில்லை அரசு மீதான கண்காணிப்பே தொடரவுள்ளது என கூட்ட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறி வருகின்றார். அப்படியாயின் ஐ.நாவின் கண்காணிப்பு எதற்கு?

ஐ.நா மனித உரிமை பேரவையில் வரவுள்ள தீர்மானத்தில் கால அட்டவனை இருந்தால் மட்டுமே நாம் அதனை ஏற்றுக்கொள்ள முடியும்.அவ்வாறு கால அட்டவனையுடன் தீர்மானம் வந்தாலும் அரசு அதனை எந்தளவுக்கு சாத்தியமாகும்.

ஏனெனில் இந்த ஆண்டு அடுத்த ஆண்டு இலங்கைக்கு தேர்தல் காலம் ஆகும்.அப்படியானால் அவர்கள் தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தில் எதனையும் செய்ய மாடடார்கள்.என்றார்.