மீண்டும் பதற்றநிலை உருவாகலாம்..!

ஆசிரியர் - Editor I
மீண்டும் பதற்றநிலை உருவாகலாம்..!

ஓமந்தையில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானசாலையை மூடுவதற்கு சாதகமான பதி ல் கிடைக்கப்பெறாத நிலையில், தொடா்ச்சியான மக்கள் போராட்டம் ஒன்றை நடாத் துவதற்கு ஓமந்தை மக்கள் தீா்மானித்துள்ளனா். 

மதுபான நிலையத்தை மூடுமாறு வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த சனிக்கிழமை ஆர்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்ததனர், இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவியதுடன் பொலிஸாரும் குவிக்கபட்டனர்.

இந்நிலையில் பல்வேறு தரப்பினருடனான ஆராய்ந்து இன்று முடிவு அறிவிக்கப்படும் என்று மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதற்கமைவாக மாவட்டச் செயலருடன் இன்று சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது. 

கிராமத்தின் பொது அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள், மாவட்டச் செயலர் ஓமந்தை பொலிசார் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். குறித்த மதுபான நிலையம் உரிய அனுமதிப் பத்திரங்களை பெற்றே திறக்கப்பட்டுள்ளது.

அதனை அமைப்பதற்கு தமக்கு எந் ஆட்சேபனையும் இல்லை என்று கிராமத்தின் ஆறு பொது அமைப்புகள் கடிதம் வழங்கியுள்ளன. மக்களின் எதிர்ப்புக் காரணமாகவே 3 மாதகாலமாக இதற்கான அனுமதியை வழங்காது இருந்தோம்.

எனினும் கிராமத்தின் பொதுஅமைப்புகள் தமக்கு ஆட்சேபனை இல்லை என்று கடிதம் வழங்கியமையால் தம்மால் அதனை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தத்து. அதனை தடுக்கும் உரிமை எனக்கில்லை 

எனவே நாடாளுமன்ற, அமைச்சு மட்டத்திற்கு குறித்த விடயத்தை கொண்டு செல்லுமாறு மாவட்டச் செயலர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். தமக்குச் சாதகமான முடிவு கிடைக்காமையால் ஏமாற்றமடைந்த மக்கள், 

சம்மத கடிதம் வழங்கிய பாடசாலை அதிபர், ஆலயமதகுரு, கிராம பொது அமைப்புகளை திட்டித் தீர்த்தனர். மதுபாண நிலையத்திற்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு