கடைசிவரை வைத்தியா் வரவில்லை. போராட்டம் நிறைவுக்கு வந்தது..

ஆசிரியர் - Editor I
கடைசிவரை வைத்தியா் வரவில்லை. போராட்டம் நிறைவுக்கு வந்தது..

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் சேவையில் இல்லாமையைக் கண்டித்து, நான்கு அம்சக் கோரிக்கையை முன்வைத்து நேற்று   வைத்தியசாலை முன்றலில்  ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று தற்காலிகமாக நிறைவுக்கு வந்துள்ளது.

01) குறித்த வைத்திய சாலையில் நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் தொடர்சியாக  24 மணிநேரமும் சேவையில் ஈடுபட வேண்டும். 

02) மருதங்கேணியில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தொடர்ந்து சேவை வழங்க வேண்டும்.

03) நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் தங்கது சேவை தொடர வேண்டும்,  அல்லது  புதிய வைத்தியர்களைக் நியமிக்க வேண்டும். 

04) நோயாளர் காவு வண்டி புதிதாக வழங்கப்பட வேண்டும்.   

ஆகிய கோரிக்கையை முன் வைத்து மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை முன் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை நேற்று வே.பிசாந்தன் ஆரம்பித்தார். அவரது ஊர் மக்கள் பலரும் கை கோர்த்து உண்ணா விரதம  போராட்டத்தை வலுப்படுத்தினர். 

தமது கோரிக்கை கள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்த நிலையில்,

 இன்று மருதங்கேணி பிரதேச செயலாளர் க.கனகேஸ்வரனின்  போராட்டம் நடத்திவருபவர்களை நேரில் சென்று கலந்துரையாடி தனது ஆதரவையும் தெரிவித்தார். 

தொடர்ந்து குறித்த கோரிக்கையை முப்பது நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி நடைமுறைப்படுத்த ஆவண செய்வதாக வழங்கிய வாக்குறுதியை அடுத்து குறித்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக இன்று நண்பகலுடன் முடித்துக் கொள்ளப்பட்டது. 

இதன் போது பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இறுதியாக பிரதேச செயலாளர் க.கனகேஸ்வரன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர்களுக்கு குளிர் பானம் வழங்கி நிறைவு செய்து வைத்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு