கடைசி நிமிடம்.! கடைசி செல்ஃபி.!! துணை இராணுவ வீரரின் கண்ணீர் கதை.!!
நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் ஸ்ரீநகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த 78 பேருந்துகளில் 2 பேருந்துகளின் மீது குறிவைத்து, வெடிகுண்டு நிரப்பிய பயங்கரவாதிகளின் வாகனம் ஒன்று நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட துணை இராணுவத்தினர் வீர மரணம் அடைந்தனர்.
மேலும் பலர் பேர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையையும், சோகத்தையும், கொந்தளிப்பையும் ஒரு சேர ஏற்படுத்தியுள்ளது.
வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு நாடு முழுவதும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், வீரமரணம் அடைந்த வீரர்களில் மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தை சேர்ந்த ஒருவரான நிதின் ரதோர். ரதோருக்கு மனைவி, 10,8,2 வயதில் 3 குழந்தைகளும், வயதான பெற்றோரும் உள்ளனர்.
இந்த தாக்குதல் நடப்பதற்கு முன் தாங்கள் புறப்பட இருந்த பேருந்து அருகே நின்று செல்ஃபி எடுத்து, தனது மனைவிக்கு அனுப்பி இருக்கிறார் நிதின் ரதோர். அவரின் இந்த கடைசி சுயமி (selfie) புகைப்படம் பார்பபவர்களை கண் கலங்க வைக்கிறது.
இது குறித்து அவரது நண்பர் கூறுகையில், இயற்கை காட்சிகளை மிகவும் விருபவர் நிதின் ரதோர். அழகான இயற்கை காட்சிகள் முன் நின்று புகைப்படம் எடுத்து அடிக்கடி அவரின் மனைவிக்கு போட்டோ அனுப்புவது அவரின் பழக்கம் என்னுடன் 2 நாட்கள் எனது ஆற்றில் தங்கிய பின் 2 நாட்களுக்கு முன்பு தான் பணிக்கு திரும்பினார். அவரின் இழப்பை என்னால் ஏற்று கொள்ளவே முடியவில்லை. என்று கூறிய அவரின் கண் கலங்கியது.