டீசல் கொள்கலனில் மண்ணெண்ணெய் கலந்த ஐவர் சிக்கினர்
இந்திய எண்ணை நிறுவனத்திற்கு சொந்தமான டீசல் நிரப்பிய கொள்கலன் பாரவூர்தியில் இருந்து டீசலை வெளியே எடுத்து அதற்கு மண்ணெண்ணெய் கலந்துக்கொண்டிருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை - தம்பலகாமம் காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட கல்மெடியாவ பகுதியில் வைத்து குறித்த ஐந்து பேரையும் தம்பலகாமம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காவல்துறை விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் இன்றைய தினம் கந்தளாய் நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தம்பலகாமம் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.