SuperTopAds

நல்லூர் பிரதேசசபைக்கு சிவசேனா இந்து அமைப்பு பாராட்டு..

ஆசிரியர் - Editor I
நல்லூர் பிரதேசசபைக்கு சிவசேனா இந்து அமைப்பு பாராட்டு..

நல்லூர் பிரதேச சபையார் இலங்கையின் ஏனைய பிரதேச சபைகளுக்கும் உள்ளூராட்சி அமைப்புகளுக்கும் வழிகாட்டியான தீர்மானத்தை இயற்றியுள்ளனர். என சிவசேனா அமைப்பு வாழ்த்து தெரிவித்து பாராட்டியுள்ளது. 

அது குறித்து சிவசேனா அமைப்பின் தலைவர் மருவன் புலவு சச்சிதானந்தன் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது , 

ஒரு நாள் அல்ல ஒரு வாரம் அல்ல ஒரு மாதம் அல்ல ஒரு நூற்றாண்டு அல்ல ஆயிரம் ஆண்டுகளல்ல. ஏறத்தாழ 5000 ஆண்டுகள் தொடர்கின்ற இலங்கைத் தமிழர் மரபு. 

இராவணன் கட்டிக்காத்த மரபு. ஆலமர் கடவுள் திருமால் எனத் தமிழர் போக்கிய இறை வழிபாட்டு மரபு. மாடுகளைச் செல்வங்களாகப் போற்றிய மரபு. காமதேனுவை மாடுகளில் கண்ட மரபு .

400 ஆண்டுகளுக்கு முன்பு வந்தோர் இந்த மரபுகளைப் புறந்தள்ளினர். துப்பாக்கி முனையில் புதிய ஒவ்வா மரபுகளைப் புகுத்தினர். 

அடிமைக் காலப்பகுதிகளில் பசுக்கொலையை ஏற்ற தமிழ்த் தலைமுறை இருக்கவில்லை. ஒல்லாந்தர் காலத்தில் ஞானப்பிரகாசர் நல்லூரை விட்டு ஓடினார்.

ஆனால் இன்றைய நல்லூர் மக்கள் நாங்கள் இங்கேயே வாழ்வோம் ஓட மாட்டோம் மாட்டிறைச்சிக் கடைகளை மூடுவோம்  எனத் தீர்மானித்துளர். 

நல்லூர் தமிழ் ஊர். தமிழ் அரசர் உறையூர். சைவநெறி ஊர். முருகனின் வாழ்விடம். நல்லூர் பிரதேச சபை எடுத்த தீர்மானம் தலைமுறை தலைமுறையாக 5000 ஆண்டுகளாகப் போற்றி பாதுகாத்த நாகரீக வாழ்வின் அடயாளம். நாகரீகத்தின் உச்சிக்கே நல்லூர் மக்கள் தங்களை அழைத்துச் சென்றனர்

நல்லூர் பிரதேச சபையின் பிரதேசசபை இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. 

யாவரும் நல்லுரைப் பின்பற்றுவோம். மனித நாகரீகத்தின் உச்சத்தை தொடுவோம். என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.