தமிழகத்திலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கு விசேட செயற்றிட்டம் வேண்டும்..

ஆசிரியர் - Editor I
தமிழகத்திலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கு விசேட செயற்றிட்டம் வேண்டும்..

தமிழகத்திலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான விசேட செயற்றிட்டம் வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படவேண்டும். என யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் நாடாளுமன்ற நிதிக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்ற நிதிக்குழு இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் திறந்த கலந்துரையாடல் ஒன்றினை நடாத்தியிருந்தது. இதன்போதே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன் மேலும் கூறுகையில், 

2009ம் ஆண்டுக்கு பின்னர் தமிழகத்தில் அகதிகளாக இருந்த 1500 பேர் மீளவும் யாழ்ப்பாணம் திரும்பியுள்ளார்கள். அவர்களுக்கான விசேட செயற்றிட் டங்கள் குறித்து வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்படவேண்டும். 

குறிப்பாக தமிழகத்தில் இன்னும் 80 ஆயிரம் பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் 15 ஆயிரம் பேர் யாழ். மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் இங்கே திரும்பி வருகிறவர்களுக்கு என்ன நடக்கிறது?

என்பதை அவதானிக்கிறார்கள். இதற்கு நல்ல உதாரணம் தமிழகத்தில் இருந்து மீண்டும் திரும்பி வருகிற குடும்பங்கள் பூரணமாக வருவதில்லை. பகுதி பகுதியாகவே திரும்பி வருகிறார்கள். எனவே இந்தியாவிலிருந்து திரும்பி வரும் மக்களுக்குரிய அடிப்படை வசதிகளை 

பெற்றுக் கெ hடுத்து அவர்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான விசேட செயற்றிட்டங்களை வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கவேண்டும். 

முன்னாள் போராளிகள் தொடர்பாக..

யாழ்.மாவட்டத்தில் 2900 புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் வரவு செலவு திட்டத்தில் முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும்போது அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தில் 50 வீதத்தை 

அரசாங்கம் செலுத்தும். என கூறப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் தேடி பார்த்தபோது சுமார் 100 பேர் வரையிலேயே கண்டறியப்பட்டார்கள். அவர்களுக்கும் வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுப்பதில் பல இடர்பாடுகள் உள்ளது. 

குறிப்பாக பாதுகாப்பு காரணங்களுக்காக யாரும் வேலைவாய்ப்பு கொடுக்கிறார்கள் இல்லை. மேலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்ககூடிய நிறுவனங்களும் இங்கு போதுமானதாக இல்லை. 

எனவே இந்த விடயத்திலும் விசேடமான கவனம் செலுத்தப் படவேண்டும் என கூறினார். தொடர்ந்து நிதிக்குழுவின் தலைவர் எம்.ஏ.சுமந்திரன் கருத்துக் கூறுகையில், முன்னாள் போராளிகளுக்கு  வேலைவாய்ப்பு கொடுத்தால் அந்த நிறுவனம் 

முன்னாள் போராளிகளுக்கு கொடுக்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை அரசு ஏற்றுக்கொள்ளும் என்ற விடயத்தை நாங்கள் ஆதரித்தோம். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால் மாற்று யோசனை என்ன? 

என கேள்வி எழுப்பினார். இதன்போது கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் கூறுகையில், முன்னாள் போராளிகள் தொடர்பாக பிரதேச செயலகங்களில் உள்ள தரவுகள் சரியானவை அல்ல. 

பிரதேச செயலகங்களில் உள்ள தரவுகளை வைத்து முன்னாள் போராளிகளை தேடியபோது அங்கே அவர்கள் இல்லை. காரணம் அவர்கள் வேறு இடங்களில் குடியேறி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

எனவே அந்த தரவுகள் மீளாய்வு செய்யப்படவேண்டும் என கூறினார். இதற்கமைய முன்னாள் போராளிகளின் தரவுகளை மீளாய்வு செய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு