யாழ்.குப்பிளானில் குடும்பத் தலைவியின் சாதுரியத்தால் திருட்டு முயற்சி முறியடிப்பு

ஆசிரியர் - Admin
யாழ்.குப்பிளானில் குடும்பத் தலைவியின் சாதுரியத்தால் திருட்டு முயற்சி முறியடிப்பு

யாழ்.குப்பிளான் வடக்கு கேணியடி ஞானவைரவர் கோயிலுக்கு அண்மித்த பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று வெள்ளிக்கிழமை(24) அதிகாலை இடம்பெறவிருந்த திருட்டு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இன்று அதிகாலை-12.30 மணியளவில் குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு தற்செயலாகக் கண் விழித்த வீட்டின் குடும்பத் தலைவி வீட்டின் முன்பக்க யன்னல் ஊடாக வெளியே நோட்டமிட்டுள்ளார்.

அப்போது வீட்டின் முன்னால் திருடனொருவன் வீடு நோக்கி நடந்து வருவதை குடும்பத்தலைவி அவதானித்துள்ளார். உடனடியாகச் சுதாகரித்துக் கொண்ட அவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கணவர் மற்றும் பிள்ளைகளை உறக்கத்திலிருந்து எழுப்பியுள்ளார்.

வீட்டிலுள்ள அனைத்து மின்குமிழ்களையும் ஒளிரவிட்ட அவர்கள் திருடன்…திருடன்…என உரத்துக் கூக்குரலிட்டுள்ளனர். இதனையடுத்துத் திருடன் வீட்டின் மதிலேறிக் குதித்து அங்கிருந்து தப்பியோடியுள்ளான்.

இதனையடுத்து அயலவர்கள் மற்றும் நண்பர்கள் என முப்பதுக்கும் மேற்பட்டோர் குறித்த பகுதியில் ஒன்றுதிரண்டு திருடனை வலைவீசித் தேடியுள்ளனர். எனினும், சந்தேகத்துக்கிடமான வகையில் யாரும் சிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, திருட்டில் ஈடுபட வந்த திருடனொருவனைக் குடும்பத்தலைவி கண்ணுற்ற போதிலும் வேறு சிலரும் இந்தத் திருட்டு முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு