ஜ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் 51/1 தீர்மானத்தை நிராகரிக்கிறோம்! இலங்கை திட்டவட்டம்..

ஆசிரியர் - Editor I
ஜ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் 51/1 தீர்மானத்தை நிராகரிக்கிறோம்! இலங்கை திட்டவட்டம்..

எந்தவொரு இறையாண்மையுள்ள அரசாலும் அதன் அரசமைப்பிற்கு முரணான மற்றும் அதன் உள்நாட்டு சட்ட செயல்முறைகளின் அர்ப்பணிப்பை முன்கூட்டியே தீர்மானிக்கும் வெளிப்புற பொறிமுறையை கட்டாயமாக திணிக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில் இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

குறிப்பிட்ட தீர்மானத்தின்[57/L.1] நகல்வடிவம் ஐக்கி;ய நாடுகள் தீர்மானத்தின் மூலம்

  வழங்கப்பட்ட ஆணையை மேலும் நீடிக்கின்றது.

மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்மானத்தையும் 51/1அதற்கு முந்தைய தீர்மானத்தையும் 46/1

இலங்கை நிராகரித்துள்ளது இந்த தீர்மானத்தின் மூலமேஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்குள் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை ஏற்படுத்தப்பட்டது.

நாங்கள்  ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையிலிருந்து எங்களை விலக்கிக்கொள்கின்றோம்;- அதற்கான காரணங்களை ஏற்கனவே சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளோம்.

தொடர்புபட்ட நாடு என்ற அடிப்படையில் இலங்கையின் சம்மதம் இன்றியே  51/1 தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது.வாக்கெடுப்பின் போது உலக நாடுகள் அந்த தீர்மானம் குறித்து பிளவுபட்டிருப்பது வெளிப்பட்டது.

இதன் காரணமாக அந்த  51/1  தீர்மானத்தின் மூலம் வழங்கப்பட்ட ஆணையை மேலும் நீடிக்கும் தீர்மானம் மனித உரிமை பேரவையின் பொது உடன்பாடு அற்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்குள் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை ஏற்படுத்துவது முன்னர் ஒருபோதும் இடம்பெறாத விடயம்.

எந்தவொரு இறையாண்மையுள்ள அரசாலும்  அதன் அரசமைப்பிற்கு முரணான மற்றும் அதன் உள்நாட்டு சட்ட செயல்முறைகளின் அர்ப்பணிப்பை முன்கூட்டியே தீர்மானிக்கும் வெளிப்புற பொறிமுறையை கட்டாயமாக திணிக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு