யாழில் ஆசிரியர் திடீர் மரணம்: நடந்தது என்ன?

ஆசிரியர் - Admin
யாழில் ஆசிரியர் திடீர் மரணம்: நடந்தது என்ன?

யாழ்.சாவகச்சேரி கச்சாய்ப் பகுதியில் ஆசிரியரொருவர் அவரது வீட்டுக் கிணற்றடியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் புதன்கிழமை(22) இரவு இடம்பெற்றுள்ளது.

தனிமையில் வாழ்ந்து வந்த குறித்த ஆசிரியர் நேற்று முன்தினம் விடத்தற்பளையிலுள்ள தனது காணிக்குச் சென்று வேறுசில வேலையாள்களுடன் இணைந்து வேலை செய்துவிட்டு மதியவேளையில் மீண்டும் கச்சாயிலுள்ள தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

பின்னர் திருமண வைபவமொன்றுக்குச் செல்லும் பொருட்டு குளிப்பதற்காகக் கிணற்றடிக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் அன்றைய தினம் இரவு நீண்ட நேரமாகியும் குறித்த ஆசிரியர் வழமை போன்று சகோதரி வீட்டிற்கு உணவருந்தச் செல்லவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்துக் குறித்த ஆசிரியரைத் தேடி அவரது சகோதரி உள்ளிட்ட உறவினர்கள் வீடு சென்று பார்த்த போது ஆசிரியர் கிணற்றடியில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

உடனடியாக மேற்படி ஆசிரியரை அம்புலன்ஸ் மூலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடாத்தப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையின் போது மாரடைப்பால் குறித்த ஆசிரியர் உயிரிழந்தமை தெரியவந்தது.

கச்சாய் தெற்கு கொடிகாமத்தைச் சேர்ந்த நமசிவாயம் பாலசுப்பிரமணியம்(வயது-49) என்பவரே இவ்வாறு மரணமானவராவார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு