முதலில் வடக்கு மாகாண சபைக்குத் தேர்தல்? - ஆணைக்குழுவின் கையில் முடிவு

ஆசிரியர் - Admin
முதலில் வடக்கு மாகாண சபைக்குத் தேர்தல்? - ஆணைக்குழுவின் கையில் முடிவு

வட மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்துவதா என்பதனை தேர்தல் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும் என்று பாராளுமன்ற சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பினை ஜயம்பதி விக்கிரமரத்ன, எம்.ஏ சுமந்திரன் மாத்திரம் நிறைவேற்ற போவதில்லை. புதிய அரசியலமைப்பொன்று வருமானால் அதனை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும். அதன்பின்னர் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படும். அதன்போது மக்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய அரசியலமைப்பில் என்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதனை கண்டுக்கொள்ள முடியும்.

அதனை விடுத்து ஜயம்பதியும், சுமந்திரனும் மாத்திரமா புதிய அரசியலமைப்பினை நிறைவேற்ற போகின்றனர். அவ்வாறு நடக்காது. ஜனநாயக முறைமையின் பிரகாரமே அனைத்து காரியங்களையும் முன்னெடுப்போம்.

ஜயம்பதி விக்கிரமரத்னவும், எம்.ஏ சுமந்திரனும் அரசியலமைப்பு பணிகளை முன்னெடுத்து செல்வது உண்மையாகும். பிரதமரினதும் வழிநடத்தல் குழுவினதும் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே அவ்விருவரும் அரசியலமைப்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். அதில் தவறுகள் ஏதும் இல்லை.

ஜயம்பதியும், சுமந்திரனும் அரசியலமைப்பினை தயாரித்தமைக்காக அவர்களின் ஒப்புதலை மாத்திரம் அரசாங்கம் பெறாது. ஆகவே யாரும் குழப்பம் கொள்ள தேவையில்லை. எதிரணியினர் இவ்வாறான கருத்துகளை கூறி மக்களின் கவனத்தை திசைத்திருப்ப பார்க்கின்றனர். மக்களின் கவனத்தை திசைத்திருப்ப முட்டாள் தனமாக செயற்பட்டு வருகின்றனர்.

அத்துடன் வட மாகாணத்திற்கு முதலில் தேர்தல் நடத்த வேண்டும் கூட்டு எதிர்க்கட்சி கோருகின்றன. வடக்கிற்கு மாத்திரம் தனியாக தேர்தல் நடத்த முடியாது. அனைத்து மாகாணங்களையும் ஒன்றிணைத்து தேர்தல் நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.இந் நிலையில் வட மாகாணத்தற்கு மாத்திரம் தனியாக தேர்தல் நடத்த முடியாது. எனினும் வட மாகாண தேர்தலை முதலில் நடத்துவதா? என்பதனை தேர்தல் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும். அரசாங்கத்தினால் அது தொடர்பில் தீர்மானிக்க முடியாது" என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு