கொள்ளையடிக்கப்பட்டதா திருப்பதி கோவில் புதையல்கள் ; வெளிவரும் பகீர் உண்மைகள்.!
திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்ற இந்து வழிபாட்டு தளங்களுள் ஒன்றாகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கிலான பக்தர்கள் வந்துசெல்லக்கூடிய திருப்பதி கோவிலில் முந்தைய காலங்களில் சேமித்துவைக்கப்பட்டிருந்த தங்கம், வைரம், வைடூரியம் உள்ளிட்டவை அடங்கிய புதையல்கள் இருந்ததாககவும் அவை தற்போது கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்து பகீர் கிளப்பியுள்ளார் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் தலைமை குருக்கள் பதவி வகித்த ரமணா தீக்ஷிதலு.
இது குறித்து ரமணா கூறுகையில், "கோயிலைப் புதுப்பிக்கிறோம் என்ற பெயரில், பழமைவாய்ந்த சுவர்களை இடிக்கின்றனர்; குழி தோண்டுகின்றனர். இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரி கவனத்துக்குக் கொண்டு சென்றால், அவரோ தனக்கு இந்த விஷயம்குறித்து எதுவும் தெரியாது என்கிறார். கோயிலின் தலைமை நிர்வாக அதிகாரிக்கே தெரியாமல் பழைமைவாய்ந்த சுவர்களை இடிக்க முடியுமா?'' என்றும் ரமணா கேள்வி எழுப்பியுள்ளார்.
அதே சமயம், ரமணாவை தலைமை குருக்கள் பதவியிலிருந்து நீக்கியதன் காரணத்தினாலேயே அவர் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது குற்றம் சுமத்துவதாக கூறி அவருக்கு நீதிமன்றத்தின் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேவஸ்தானம்.
ரமணாவோ கோவிலின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அது குறித்த உண்மைகள் வெளிவர வேண்டுமென்றால் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டுமென உறுதியாக தெரிவிக்கிறார்.