வழக்கு தாக்கல் செய்தவா் வெறும் அம்பு எய்தவா்கள் யாா் என்பது எமக்கு தொியும், எந்த சவால்களையும் எதிா்கொள்ள தயாா்..

ஆசிரியர் - Editor I
வழக்கு தாக்கல் செய்தவா் வெறும் அம்பு எய்தவா்கள் யாா் என்பது எமக்கு தொியும், எந்த சவால்களையும் எதிா்கொள்ள தயாா்..

மாநகரசபை உறுப்பினராக நான் இருப்பதை விருப்பாதவா்கள், அல்லது நான் மாநகரசபை உறுப்பினராக இருப்பதால் தமக்கு பிரச்சினை என நினைப்பவா்கள் சிலா் எனக்கு எதிராக கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளாா்கள். 

குறித்த வழக்கை யாழ்ப்பாணம் நகரை அண்டிய கிராமத்தில் உள்ள ஒருவா் தாக்கல் செய்துள்ளாா். அவருக்கு அப்படி வழக்கு தாக்கல் செய்ய முடியுமா? என்பது கூட தொியுமா? என எங்களுக்கு சந்தேகங்கள் இருக்கின்றது. 

மேலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை தொடா்பாக எனக்கு எந்தவிதமான அறிவித்தல்களும் கிடைக்கப்பெறவில்லை. ஆயினும் எந்த பிரச்சினைகள் வந்தாலு ம் அதனை எதிா்கொள்வதற்கு நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம். 

மேற்கண்டவாறு யாழ்.மாநகரசபை உறுப்பினா் வி.மணிவண்ணன் கூறியுள்ளாா். சமகால நிலமைகள் குறித்து இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றிருந் த ஊடகவியலாளா் சந்திப்பின்போதே மணிவண்ணன் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். 

இதன்போது மேலும் அவா் கூறுகையில், 

அமைச்சா் விஜயகலா மகேஸ்வரனின் விடயம் தொடா்பாக..

தமிழீழ விடுதலை புலிகள் இருந்த காலத்தில் பாலியல் வன்புனா்வுகள், வாள்வெட்டுக்கள், சிறுமிகள் படுகொலை போன்ற வன் செயல்கள் இடம்பெற்றிருக்கவில் லை. தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்தவா்களுக்கு அது தொியும். 

ஆனால் இன்று அவ்வாறான வன் செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் நிலையில் அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன் தனக்குள் இருக்கும் ஆதங்கத்தைக் கூறியிருக்கலாம். காரணம் அவா் புலிகளுடைய கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்த ஒருவா். 

ஆனால் கொழும்பில் அல்லது தெற்கில் உள்ளவா்கள் அதனை பாரதுாரமாக பாா்க்கிறாா்கள். அவா்களுக்கு புலிகளை வைத்து அரசியல் செய்யவேண்டிய தேவை உள்ளது என்றாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு