றெஜினா கொலை, சில தடயப்பொருட்கள் மீட்பு.

ஆசிரியர் - Editor I
றெஜினா கொலை, சில தடயப்பொருட்கள் மீட்பு.

மாணவி றெஜினா கொலை தொடர்பில் மேலும் சில தடய பொருட்கள் இன்று மீட்கப்பட்டுள்ளது.

றெஜினாவின் உள் பெனியன், தலைமுடிக்கு போடும் கிளிப் மற்றும் பூல்பான்ட் என்பன பற்றைக்குள்ளிருந்து மீட்கப்பட்டது.

வீட்டில் இருந்து சுமார் 600 மீற்றர் தூரத்தில் இருந்து இவை மீட்கப்பட்டன.

கிராம இளைஞர்கள் இன்று காலை 10.30 மணிதொடக்கம் தேடுதலில் ஈடுபட்டனர். 

12.00 மணியளவில் மேற்படிப் பொருட்களை மீட்கப்பட்டன.

இப்பொருட்களை பெற்றோர்  அடையாளம் காட்டினர். 

இதைத் தொடர்ந்து பொலிஸார் மோப்ப நாயுடன் வந்து தேடுதலில் ஈடுபட்டனர்.

எனினும் பாடசாலைச் சீருடை, ரை, சப்பாத்து என்பன மீட்கப்படவில்லை.



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு