சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவு இராண்டாக பிரிக்கப்படுகிறது. ஏற்பாடுகள் தீவிரம்..

ஆசிரியர் - Editor I
சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவு இராண்டாக பிரிக்கப்படுகிறது. ஏற்பாடுகள் தீவிரம்..

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவினை இரு பிரதேச செயலகங்களாக பிரித்து செயல்படுவதற்கான அனுமதி மற்றும் வர்த்தகமானிக்கான ஏற்பாடுகளிற்காக எதிர்வரும் செவ்வாய்க் கிழமை அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மிகப் பெரிய நிலப்பரப்பினையும் அதிக கிராம சேவகர் பிரிவுகளையும் கொண்ட சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவினை இரு பிரதேச செயலகங்களாக பிரித்து பிரதேச மக்களின் அபிவிருத்திக்கு வலுச் சேர்க்குமாறு நீண்டகாலமாகவே கோரிக்கை விடுக்கப்பட்டுவந்தது.

இந்த நிலையில் கடந்த 27ம் திகதி கொழும்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அப் பகுதி மக்களின் நீண்டகால நிர்வாக ரீதியான இக்கோரிக்கையினை உடன்னியாக நடைமுறைப்படுத்தி வழங்க வேண்டும். எனக் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இதன்போது நாட்டில் 50 கிராம சேவகர் பிரிவிற்கும் மேற்பட்ட கிராம சேவகர் பிரிவுகளையுடைய பிரதேச செயலகங்களை இரண்டு செயலகங்களாக பிரித்துச் செயல்பட முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராயா தெரிவித்திருந்தார்.

இவற்றினை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரிடம் கேட்டறிந்த பிரதமர். அதற்கு ஏற்ப உடனடியாகவே சாவகச்சேரி பிரதேச செயலகத்தினை இரண்டாகப் பிரித்துச் செயல்பட ஆவண செய்யுமாறு பணித்திருந்தார். 

அதன் பிரகாரம் குறித்த விடயம் முதல் நடவடிக்கையாக அமைச்சரவை அங்கீகாரத்திற்காக செல்கின்றது. அமைச்சரவை அங்கீகாரத்தின் பின்னர் அரச இதழில் பிரசுரமாகி நடைமுறைப்படுத்தப்படும். என எதிர்பார்க்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு