200மில்லியன் செலவில் மயிலிட்டி துறைமுகம் அபிவிருத்தி..

ஆசிரியர் - Editor I
200மில்லியன் செலவில் மயிலிட்டி துறைமுகம் அபிவிருத்தி..

யாழ்.மயிலிட்டி துறைமுகம் சுமார் 200 மில்லியன் ரூபாய் செலவில் ஆழப்படுத்தப்பட்டு நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

யூ.என்.டீ.பி மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சு ஆகியன இணைந்து மேற்படி மயிலிட்டி துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவுள்ளன.

இதற்கமைய இன்றைய தினம் காலை மத்திய கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சு அதிகாரிகள் மற்றும் யூ.என்.டீ.பி அதிகாரிகள் 

மயிலிட்டி துறைமுகத்தை நேரில் பார்வை யிட்டுள்ளார்கள். இதன்போது தெல்லிப்பழை பிரதேச செயலர் வலி,வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன்

மற்றும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள பணிப்பாளர் ஆகி யோர் கலந்து கொண்டிருந்தனர். மேலும் இந்த அபிவிருத்தி திட்டம்

150 மில்லியன் ரூபாய் செலவில் மேற்கொ ள்ளப்படவுள்ளதுடன் துறைமுகத்தை ஆழ ப்படுத்துதல் மீன்பிடி படகுகளுக்கான எரிபொருள் நிரப்பு நிலையம் அமைத்தல்

மற்றும் மீனவர்களுக்கான மலசல கூடம் குடிதண்ணீர் வசதிகள் உள்ளிட்ட பல விடயங்கள் செய்யப்படவுள்ளது.




பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு