பலாலி விமான நிலைய அபிவிருத்தி: யாழ். வருகிறார் ரணில்

ஆசிரியர் - Admin
பலாலி விமான நிலைய அபிவிருத்தி: யாழ். வருகிறார் ரணில்

யாழ்.பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன் பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக எதிர்வரும் யூலை- 10 ஆம் திகதி நேரில் வந்து ஆராயவுள்ளதாக இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று(27) நடைபெற்ற வடக்கு அபிவிருத்தி தொடர்பான சிறப்புக் கூட்டத்தில் பலாலி விமான நிலையத்தைப்  பிராந்திய விமான நிலையமாகத் தரமுயர்த்துவது மற்றும் அதற்குத் தேவையான காணிகள் தவிர்ந்த அதனை அண்டிய ஏனைய காணிகளை விடுவிப்பது என்பன தொடர்பாக ஆராயப்பட்டது.

இந்த விடயத்தில் விரைவாக முடிவெடுக்கப்பட வேண்டுமெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதனையடுத்து எதிர்வரும் யூலை- 10ஆம் திகதி தாம் யாழ்ப்பாணம் வரும் போது, இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங்கும் அங்கு வருவார் எனவும், இருவரும் இணைந்து பலாலி விமான நிலையத்தை நேரில் பார்வையிட்டு அதனை  அபிவிருத்தி செய்வது குறித்த திட்டங்களை இறுதி செய்வதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு