நயினாதீவு தேர்த்திருவிழாவிற்கு நகையணிந்து சென்ற பெண்களுக்கு ஏற்பட்ட நிலை!

ஆசிரியர் - Admin
நயினாதீவு தேர்த்திருவிழாவிற்கு நகையணிந்து சென்ற பெண்களுக்கு ஏற்பட்ட நிலை!

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நேற்றுப் புதன்கிழமை(27) இடம்பெற்ற நிலையில் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பெண் அடியவர்கள் இருவரின் பல ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கநகைகள் திருட்டுப் போயுள்ளன.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

ஆலயத்தின் முன்பக்கம் திருநீறு வாங்குவதற்காகப் பக்தர்கள் முண்டியடித்த வேளையில் அடியவரொருவரின் தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தியே இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும், தேர்த்திருவிழா நிறைவடைந்த பின்னர் படகில் பயணித்த குடும்பப் பெண்ணொருவரின் பத்துப் பவுண் தாலிக்கொடியும் அபகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு