சந்திரயான்-3 லேண்டரை நானேவடிவமைத்தேன் என கூறிய போலி விஞ்ஞானி கைது

ஆசிரியர் - Editor II
சந்திரயான்-3 லேண்டரை நானேவடிவமைத்தேன் என கூறிய போலி விஞ்ஞானி கைது

சந்திரயான்-3 விண்கலத்தில் லேண்டரை நான் தான் வடிவமைத்தேன் என்று இஸ்ரோ விஞ்ஞானி போல் ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்கிய போலி விஞ்ஞானி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்கு சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்து, நிலாவுக்கு அனுப்பி ஆய்வு செய்து வருகின்றது.

இந்நிலையில் இந்திய மாநிலம் குஜராத்தில், சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றி தொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானியை போல ஒருவர் ஊடங்கங்களுக்கு கருத்து வழங்கியுள்ளார். அவர் மீது, முறைப்பாடும் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில், மிதுல் திரிவேதி என்பவரை கைது செய்தனர். அப்போது தான், இஸ்ரோவின் பண்டைய அறிவியல் பயன்பாட்டுத்துறையின் உதவித் தலைவராக ஆள்மாறாட்டம் செய்யப்பட்டதும், 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதியிடப்பட்ட போலிக் கடிதம் ஒன்றை வைத்திருந்ததும் தெரியவந்தது.

அதுமட்டுமல்லாமல், இவருக்கும் சந்திரயான்-3 திட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இஸ்ரோ ஊழியர் என்று தன்னைக் கூறியதும் பொய் தான் என்பது தெரியவந்துள்ளது.

மேலும், இஸ்ரோவின் அடுத்த பாரத சக்தி என்ற திட்டத்திற்கான விண்வெளி ஆராய்ச்சி உறுப்பினர் என்று வைத்திருந்த போலி கடிதத்தையும் பொலிசார் பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு