#மாணவி அம்ஷியின் மரணத்திற்கு நீதி வேண்டும்

#மாணவி அம்ஷியின் மரணத்திற்கு நீதி வேண்டும்
மாணவி அம்ஷியின் மரணத்திற்கு நீதி வேண்டும்-சிவில் சமூக செயற்பாட்டாளரும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க ஆலோசகருமான தாமோதரம் பிரதீபன்
கடந்த 2025.04.29 அன்று கொழும்பு கொட்டஞ்சேனை பிரதேசத்தின் தொடர் மாடி குடியிருப்பு ஒன்றின் 6 வது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்ட அம்ஷிகா எனும் மாணவியினுடைய மரணத்திற்குக் காரணமான கணித பாட ஆசிரியர் (அந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர்) தண்டிக்கப்பட வேண்டும் என சிவில் சமூக செயற்பாட்டாளரும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க ஆலோசகருமான தாமோதரம் பிரதீபன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தின் கல்முனை நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள அம்பாறை மாவட்ட பிராந்தியக் காரியாலயத்தில் இன்று முறைப்பாடு ஒன்றை அளித்து மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அம்முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாவது
கடந்த 2025.04.29 அன்று கொழும்பு கொட்டஞ்சேனை பிரதேசத்தின் தொடர் மாடி குடியிருப்பு ஒன்றின் 6 வது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்ட அம்ஷிகா எனும் மாணவியினுடைய மரணத்திற்குக் காரணமான கணித பாட ஆசிரியர் (அந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர்) தண்டிக்கப்பட வேண்டும் எனவும்இ
தனக்கு நேர்ந்த அவலம் பற்றி பாடசாலை நிருவாகத்திடம் முறையிட்டபோதும் அது பாடசாலையின் நற்பெயருக்கு அபகிகீர்த்தியை ஏற்படுத்தும் எனக் கருதித் தட்டிக் கழித்து மாணவியை மன உழைச்சலுக்குள்ளாக்கிய அந்தப் பாடசாலை நிருவாகமும் கூட இந்த மாணவியின் மரணத்திற்கு வகை கூற வேண்டும்.
இந்தப் பாடசாலையைவிட்டுச் சென்ற மற்றப் பாடசாலையிலும் இம்மாணவியை அவாமானப்படுத்திய மற்றும் மன உளைச்சலுக்காளாக்கிய ஆசிரியர்களும் வகை கூற வேண்டும்.இந்த மாணவியின் விடயத்தை முறையாக விசாரணை செய்து குற்றவாளிகளைக் கைதுசெய்யாது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளாது கண்துடைப்பிற்காகக் கைது செய்து பிணையில் செல்ல அனுமதித்தவர்களும் வகை கூற வேண்டும்.
அத்தோடு இந்த மாணவி சென்ற தனியார் வகுப்பின் உரிமையாளரும் கூட இந்த மாணவி தற்கொலை செய்யுமளவிற்குத் தூண்டுதல்களில் ஈடுபட்டிருக்கிறார் அதனால் இவரும் இதற்கு வகை கூற வேண்டும்.இவ்வாறு தொடர்ச்சியாக இந்த மாணவி துஷ்பரயோகங்களுக்கும் பாலியல் துன்பங்களுக்கும் இமன உளைச்சலுக்கும் உள்ளாகித் தனக்கு நீதி கிடைக்காது எனும் நிலையிலும் மன உளைச்சலின் உச்ச நிலையில் தன் வீட்டுத் தொடர் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
தனக்கு நீதி கிடைக்க வேண்டும் தன்னைப்போல் இனி யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தன் உயிரைத் தந்து நீதி கேட்டிருக்கிறாள் இந்த மாணவி ஆனால் இந்த மாணவிக்கான நீதி இதுவரை கிடைக்காத நிலையில் இந்த மாணவியின் பெற்றோரும் இன்னும் பலரும் வீதியில் இறங்கி போராடி வரும் நிலையில் இந்த மாணவி மனநோய் தொடர்பான சிகிச்சைகளைப் பெற்று வந்த ஒரு மன நோயாளி என்பது போல பாராளுமன்றத்தில் கௌரவ மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் உரையாற்றியிருக்கின்றார் இவரும் இதற்கான வகை கூற வேண்டும்.
இந்த மாணவியனுடைய இறப்பிற்கு சரியான விசாரணை நடத்தப்பட்டு இந்த இறப்பிற்குக் காரணமான அத்தனை பேரும் தண்டிக்கப்பட்டு இனியும் எந்த மாணவிக்கும் இவ்வாறு ஒரு அநீதி இழைக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் இவ்வாறான குற்றங்களுக்கான உரிய நல்ல சட்டங்கள் இயற்றப்படவும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவும் மனித உரிமை சார்ந்து செயல்படுகின்ற நான் இலங்கை மனித உரிமை ஆணையகத்தின் அம்பாறை மாவட்ட கல்முனை பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடளித்திருக்கிறேன்.
இந்த மாணவியினுடைய மரணத்திற்கு நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் இனியும் இந்த மாணவி போன்று வேறு யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் தொடர்ந்தும் நாம் செயற்படுவோம்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.