SuperTopAds

காரைதீவில் முள்ளிவாய்க்கால் நீங்காத நினைவுகள் இன்று அனுஷ்டிப்பு

ஆசிரியர் - Editor III
காரைதீவில் முள்ளிவாய்க்கால் நீங்காத நினைவுகள் இன்று அனுஷ்டிப்பு

காரைதீவில் முள்ளிவாய்க்கால் நீங்காத நினைவுகள் இன்று அனுஷ்டிப்பு

முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தை முன்னிட்டு வழமைபோல் இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலின் ஏற்பாட்டில் இன்று காரைதீவு  பொதுச் சந்தைக்கு முன்பாக இடம்பெற்றது.

இதன் போது இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி  வழங்கி வைக்கப்பட்டது.

முன்னதாக துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன . பலரும் உரையாற்றினர்.நிறைவாக அங்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி  அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். இதேபோல் இவ் வாரம் பூராக மாவட்டத்தில் சகல பாகங்களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எமது மக்களின் அழிவை மறக்க முடியாது முள்ளிவாய்க்கால் வாரமாக இனப்படுகொலையின்  நினைவு தினத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயல்பாடு  தொடர்ச்சியாக இடம்பெறும் என காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.

இதே வேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் காரைதீவில் அனுஷ்ட்டித்த வேளை பொலிஸாரும் அங்க வருகை தந்திருந்தனர்.

 நிகழ்வில்  தமிழரசுகட்சியின் காரைதீவுக்கான தலைவர் ,செயலாளர் ,கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இவ்வேளை செயலாளர் கதிர்காமத்தம்பி செல்வப்பிரகாஷ் அவர்கள் உணர்வுபூர்வமான உள்ளக்குமுறல்களை  வெளிப்படுத்தினார்.