வெசாக்கை முன்னிட்டு , யாழ் . மாவட்ட செயலகத்தில் மர நடுகை

வெசாக் பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு மாவட்ட செயலகத்தில் சிரமதானம், மர நடுகை மற்றும் கண் பரிசோதனை முகாம் என்பன மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களினால் மாவட்டச் செயலக வளாகத்தில் சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டதனைத் தொர்ந்து மர நடுகையானது பழைய பூங்காவில் இடம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் அனுசரனையில் உத்தியோகத்தர்களுக்கான கண் பரிசோதனை முகாமானது மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்திலும் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் உ.தர்சினி உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.