17 வயதுச் சிறுவனைப் பலியெடுத்த உழவியந்திரம்: யாழில் பெரும் சோகம்

ஆசிரியர் - Admin
17 வயதுச் சிறுவனைப் பலியெடுத்த உழவியந்திரம்: யாழில் பெரும் சோகம்

ஆலயத் தேர்த் திருவிழாவிற்கு உழவியந்திரத்தில் சென்ற 17 வயதுச் சிறுவன் திடீரென அதிலிருந்து தவறிவிழுந்து உழவியந்திரத்துக்குள் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் யாழ். தீவகம் மண்கும்பான் சந்தியில் நேற்றுத் திங்கட்கிழமை(25) பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுவனின் நெருங்கிய உறவினரொருவர் யாழ்.மண்கும்பான் பிள்ளையார் ஆலயத்திலிருந்து பூநகரி ஆலங்கேணியிலுள்ள ஆலயமொன்றை நோக்கித் தூக்குக் காவடி எடுத்து நேர்த்திக் கடன் நிறைவேற்றினார். இதன் போது குறித்த உறவினர் தூக்குக் காவடி எடுத்த உழவியந்திரத்தின் பின்னால் அமர்ந்திருந்து சிறுவனும் பயணித்துள்ளான்.

குறித்த சிறுவன் மண்கும்பான் சந்தியில் திடீரென இறங்கி நண்பரொருவரின் மோட்டார்ச் சைக்கிளொன்றில் பயணிக்க முற்பட்ட போது நிலத்தில் தவறிவிழுந்து உழவியந்திரத்தின் சில்லுக்குள் சிக்கிச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உழவியந்திரச் சாரதி ஊர்காவற்துறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி பூநகரி ஆலங்கேணிப் பகுதியைச் சேர்ந்த சச்சித்தானந்தம் கிளியமுதன்(வயது-17) என்ற சிறுவனே பரிதாபரமாக உயிரிழந்தவராவார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு