SuperTopAds

கிஷோர், மயூரன், திலகராணி உள்ளிட்டோரை நீதிமன்றில் முன்னிலையாக பணிப்பு!

ஆசிரியர் - Editor I
கிஷோர், மயூரன், திலகராணி உள்ளிட்டோரை நீதிமன்றில் முன்னிலையாக பணிப்பு!

சாவகச்சேரி நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை வலிதற்றதாக்கும் விதத்திலும் அதற்கு முரணான வகையில் நடந்து கொள்வதாக தெரிவித்து சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் செ.மயூரன், 

சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் திலகராணி ஆகியோரை இன்று திங்கட்கிழமை சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றத்தால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 12ஆம் தேதி தனியாரால் அபகரிக்கப்பட்ட தாவளை இயற்றாலை ஊரெல்லை வீதியை மீட்டுத் தருமாறு கோரி சாவகச்சேரி பிரதேச சபைக்கு முன்பாக கிராம மக்களோடு இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து சாவகச்சேரி பிரதேசபை கொடிகாமம் பொலிஸாரோடு இணைந்து பிரதேச சபையில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் தனியாரால் அபகரிக்கப்பட்டிருந்த குறித்த வீதியை அளவீடு செய்து 

எல்லை வேலிகளை அகற்றி பொதுமக்கள் பாவனைக்காக திறந்து விட்டிருந்தனர். இந்நிலையிலேயே தனியாரால் சாவகச்சேரி நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துள்ளனர். 

18.01.2021 ஆம் திகதி சாவகச்சேரி நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை வலிதற்றதாக்கும் விதத்திலும் அதற்கு முரணான வகையிலும் சேயற்பட்டதாக தெரிவித்து அது தொடர்பாக ஆராய்வதற்காக நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.