யாழ்.பண்ணை மீன் சந்தை மிக விரைவில் நவீன வசதிகளுடன் புனரமைப்பு செய்யப்படும்.. வி.மணிவண்ணன் உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.பண்ணை மீன் சந்தை மிக விரைவில் நவீன வசதிகளுடன் புனரமைப்பு செய்யப்படும்.. வி.மணிவண்ணன் உறுதி..

யாழ்.பண்ணை மீன் சந்தை நவீன வசதிகளுடன் புனரமைப்பு செய்து தரும்படி மீனவா்கள் மற்றும் வியாபாாிகள் விடுத்திருந்த கோாிக்கைக்கு அமைவாக மேற் படி மீன்சந்தை நவீன வசதிகளுடன் விரைவில் புனரமைப்பு செய்யப்படவுள்ளது. 

மேற்படி மீன் சந்தையை புனரமைத்து தரும்படி மீனவா்களாலும், வியாபாாிகளாலும் விடுக்கப்பட்ட கோாிக்கைக்கு அமைவாக அண்மையில் யாழ்.மாநகரசபை யின் மராமத்து குழு நோில் சென்று பாா்வையிட்டிருந்தது. 

இதனையடுத்து சந்தையை புனரமைப்பு செய்வதற்கான அனுமதியை மராமத்து குழுவின் தலைவரும், மாநகரசபை உறுப்பினருமான விஸ்வலிங்கம் மணிவ ண்ணன் வழங்கியிருக்கின்றாா். 

இது தொடா்பாக மணிவண்ணன் ஊடகங்களுக்கு கூறுகையில், யாழ்ப்பாணத்தில் மிக பிரபல்யமான சந்தைகளில் ஒன்றும் மிக நீண்டகாலமாக இயங்கிவரும் சந்தைகளில் ஒன்றுமான பண்ணை மீன் சந்தை

அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையில் இயங்கி வருகின்றது. இது தொடா்பாக வியாபாாிகளும், மீனவா்களும் எமக்கு தொியப்படுத்தியிருந்த நிலையில் எமது மராமத்து குழு நோில் சென்று சந்தை நிலவரத்தை பாா்த்திருந்தது. 

இதற்கமைய பண்ணை மீன் சந்தையை மிக விரைவில் நவீன வசதிகளுடன் புனரமைப்பு செய்யவதற்கான அனுமதியை வழங்கியுள்ளேன். இதற்கமைய புனர மைப்பு பணிகள் மிக விரைவில் ஆரம்பமாகவுள்ளது. 

குறித்த மீன் சந்தையை நவீன வசதிகளுடன் கூடிய புதிய மீன் சந்தையாக மாற்றுவது என்பது எனது திட்டம் அதையும் விரைவில் செய்ய நடவடிக்கை எடுப்பேன் என்றாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு