வீட்டுத்திட்ட பயனாளிகளின் இறுதி பெயர் பட்டியலை பொதுமக்களுக்கு காட்சிப் படுத்துங்கள்! அமைச்சர் டக்ளஸ்...

ஆசிரியர் - Editor I
வீட்டுத்திட்ட பயனாளிகளின் இறுதி பெயர் பட்டியலை பொதுமக்களுக்கு காட்சிப் படுத்துங்கள்! அமைச்சர் டக்ளஸ்...

யாழ்.மாவட்டத்தில் இவ்வருடம் சுமார் 600 பேருக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படவுள்ள நிலையில் பயனாளிகளின் இறுதி பெயர் பட்டியலை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துங்கள் என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். 

நேற்று வியாழக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி கலந்துரையாடலில் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன் வீட்டு திட்டம் தொடர்பில் விளக்கம் அளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் 10 இலட்சம் ரூபாய் வீடு திட்டங்கள் 379 மற்றும் ஆறு இலட்சம் ரூபாய் வீட்டு திட்டம் 221 ம் வழங்கப்படவுள்ளது. மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலர் பிரிவிலும் முன்னுரிமைப்படுத்தப்பட்ட 

அதாவது நலம்புரி நிலையங்களில் இருந்தோர் விசேடதவையுடையவர்கள்இ சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பெண் தலைமைத்துவங்களைக் கொண்ட குடும்பங்கள் ஆகியவை முன்னுரிமைப் படுத்தப்படுகிறது.

எனினும் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படாத நிலையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட வருவதாக தெரிவித்தார். இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டதும் 

அதனை உரிய இடங்களில் காட்சிப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு