யாழ்.மாநகரசபையின் மாண்பை மதிக்காத முதல்வர் எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபையின் மாண்பை மதிக்காத முதல்வர் எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு..

 

யாழ் மாநகர சபையின் முதல்வர் ஆர்னோல்ட் சபையின் தீர்மானத்தை மீறி சபை மாண்புகளை மதிக்காது செயற்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததுடன் மரம் நாட்டும் நிகழ்வில் இரானுவத்தினருடன் முதல்வர் கலந்து கொண்டமைக்கு தமது கண்டனங்களையும் வெளியிட்டிருந்தனர்.

இதனால் நேற்றைய சபை அமர்வில் நீண்ட நேரமாக பெரும் குழப்பங்கள் ஏற்பட்டிருந்ததுடன் உறுப்பினர்களிடையே பரஸ்பர குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வாக்குவாதங்களும் இடம்பெற்றிருந்தன. நீண்ட நேரப் போராட்டங்களின் சபையை முதல்வர் கட்டுப்படுத்திய போதும் முதல்வர் மீதான குற்றச்சாட்டுக்களை உறுப்பினர்கள் நிறுத்தாது தொடர்ந்தும் முன்வைத்திருந்தனர்.

யாழ். மாநகர சபையின் ஐந்தாவது அமர்வு மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் நேற்றுக் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிய தொடர்ந்து இரவு ஏழு மணி தாணிடியும் நடைபெற்றிருந்தது. இதன் போது சபையின் கடந்த விசேட கூட்ட அறிக்கை தொடர்பான விடயம் சபையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஏற்பட்ட சர்ச்சையே குழப்பங்களை ஏற்படுத்தியிருந்தது.

அதாவது சபையின் கடந்த விசேட கூட்டத்தின் போது மாநகர சபையின் செயற்பாடுகளில் இரானுவத் தலையீடு இருக்கக் கூடாதென்றும் இரானுவத்தின் நிகழ்வுகளை மாநகரசபையினர் புறக்கணிப்பதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. 

ஆயினும் அத் தீர்மானத்தை மீறி அதணை அவமதிக்கும் வகையில் சபை முதல்வரும் சில உறுப்பினர்களும் மரங்கள் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்ததாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் விஸ்வலிங்கம் மணிவண்ணண் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இதற்குப் பதிலளித்த முதல்வர் மரங்கள் நாட்டும் செயற்பாடு மாநகர சபையால் முன்னெடுக்கப்படவில்லை என்றும் வடக்கு ஆளுநரும் மாகாண சபையும் முன்னெடுத்த நிகழ்விலேயே தாங்கள் கலந்து கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டார். அத்தோடு அந்த நிகழ்விற்கு இரானுவத்தினரை ஆளுநரே பயன்படுத்தியிருந்ததாகவும் கூறினார். 

மேலும் மாநகர சபை நிதியைச் செலவழிக்கவில்லை என்றும் அந்த நிகழ்விற்கு தாம் அழைக்கப்பட்டதாகவும் பங்குதாரர்களாகவே அங்கு சென்றதாகவும் கூறினார். எனினும் முதல்வரின் கூற்றை ஏற்றுக் கொள்ளாத ஈபிடிபி மற்றும் முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இராணுவம் மேற்கொள்கின்ற நிகழ்வுகளில் பங்கு கொள்வதில்லை.

 என்றும் சிவில் நிர்வாகத்தில் இரானுவத் தலையீடு இருக்கக் கூடாதென்றும் சபையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்ற போது அதனை மீறி முதல்வர் எவ்வாறு கலந்து கொள்ள முடியுமென கேள்வி எழுப்பினர். முதல்வராக இருந்து கொண்டு சபையின் தீர்மானத்தை மீறியதனை கண்டிப்பதாகவும் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

இதன் போது எழுந்த கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் இங்கு தேவையற்ற விடயங்களை மணிவண்ணன் கதைப்பதாகவும் அவர் ஒரு டம்மி என்றும் குறிப்பிட்டதுடன் உணர்வு ரீதியாக உணர்ச்சி வசப்பட பேசுகின்ற நீங்கள் எவரும் துப்பாக்கி தூக்குவதற்கு தயாரா எனக் கேள்வியெழுப்பியிரந்தார். இதனாலேயே சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டு பரஸ்பர வாக்குவாதங்கள் ஏற்பட்டிருந்தன.

இதன் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈபிடிபி, ஐக்கிய தேசியக் கட்சிகளின் உறுப்பினர்களும் முதல்வரின் கருத்துக்களை நிராகரித்து அவரின் செயற்பாட்டையும் கண்டித்தனர். மேலும் இராணவத்தை வெளியேற வேண்டுமென்று கோருகின்ற கட்சியினரோ இரானுவத்தின் நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாமா என்றும் கேள்வியெழுப்பியிருந்தனர்.

இவற்றுக்கெல்லாம் பதிலளித்த முதல்வர் தான் மாநகர சபையின் தீர்மானத்தை மீறவில்லை என்றும் அத் தீர்மானத்தை மதிப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் அவர்கள் செய்த நிகழ்வில் நாங்களும் கலந்த கொண்டிருந்தோம். ஆகவே அந்த கலந்து கொண்ட போது பச்சை உடுப்புக்காரர்கள் நின்றது குற்றமெனப் பேசுகின்றவர்கள் நிகழ்வின் தன்மையும் விளங்கி அறிந்து பேச வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு