ஈ.பி.டி.பி ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகளை ஒரு மாதத்திற்குள் விசாரிக்க தீர்மானம்..

ஆசிரியர் - Editor I
ஈ.பி.டி.பி ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகளை ஒரு மாதத்திற்குள் விசாரிக்க தீர்மானம்..

யாழ்.மாநகரசபையின் முன்னைய ஆட்சிக் கா லத்தில் இடம்பெற்ற வருமான இழப்புக்கள் கு றித்து சபைக்கு அறிக்கை ஒன்றை ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்கவேண்டும். என  நேற்றைய தினம் யாழ். மாநகர சபையில் தீர்மானிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் கடந்த ஆட்சியில் இடம்பெற்ற சில முறைகேடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டி அதனை விசாரணை செய்ய வேண்டும் என கடந்த அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை கருத்தாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

குறித்த விடயம் தனது தீர்மானம் அதனை மற்றுமோர் உறுப்பினரான தர்சானந் வழிமொழிந்த்தாக உறுப்பினர் ந.லோகதயாளன் சுட்டிக்காட்டியதோடு அவ்வாறே கடந்த கூட்ட அறிக்கை திருத்தப்பட வேண்டும்  என்றும் கோரினார்.

குறித்த விடயம் வழிமொழியப்பட்டபோதும் தீர்மானமாக நிறைவேற்றப்படவில்லை என உறுப்பினர். ரெமிடியஸ் தெரிவித்த நிலையில் அவ்விடயங்கள் தொடர்பில் புலனாய்வாளர்கள் இருக்கவில்லை எனத் தெரிவித்திருந்தமையும் பொய்யென நிரூபிக்கும் சான்று ஆவணமும் உள்ளதனால் 

அவ்வாறு சபைகளின் சொத்துக்கள் தவறாக கையாண்டமைக்கு கண்டிப்பாக விசாரணை இடம்பெறவேண்டும் எனக் கூறுயதோடு அக் கட்டிடத்திலே புலனாய்வாளர்களே தங்கியிருந்தனர் என்பதற்கான ஆதாரமாக யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வழங்கிய கடிதத்தை உறுப்பினர் சபையிலே வாசித்தார்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையினை எதிர்வரும் ஒரு மாத காலத்தில் சபைக்குச் சமர்ப்பிக்கப்படும். என மாநகர முதல்வர் ஆனோல்ட் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு