SuperTopAds

ராமநாதபுரம்: 4-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

ஆசிரியர் - Editor II
ராமநாதபுரம்: 4-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, தொண்டி மீனவர்கள் கடந்த 3 நாட்களாக கடலுக்குச் செல்லாமல் இருந்து வருகின்றனர். 

கடலில் பலத்தகாற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்ததை தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

இதனால் 1,800 விசைப்படகுகளும்,  3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை தொடர்வதால் 4 ஆவது நாளான இன்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.