SuperTopAds

வடமாகாணசபையின் கீழுள்ள சிற்றூழியர் வெற்றிடங்களை நிரப்ப ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இருந்து ஆட்களை கொண்டுவர சதித்திட்டம்...!

ஆசிரியர் - Editor I
வடமாகாணசபையின் கீழுள்ள சிற்றூழியர் வெற்றிடங்களை நிரப்ப ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இருந்து ஆட்களை கொண்டுவர சதித்திட்டம்...!

வடமாகாண சபையின் கீழ் உள்ள சிற்றூழியர் வெற்றிடங்களுக்கு ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களை சேர்ந்த 427 பேரை விரைவில் நியமிப்பதற்கான இரகசிய நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

வடமாகாண சபையின் கீழ் உள்ள அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களில் சுமார் 1200 சிற்றூழியர் வெற்றிடங்கள் உள்ளது. இது தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. 

கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தில் வடமாகாணத்திற்கு நியமிக்கப்பட்ட 119 பேர் கடந்த வாரம் நேர்முகத் தேர்வு அழைக்கப்பட்டனர். 

இவர்களில் 117 பேர் நேர்முகத்தேர்வில் தோற்றியுள்ளனர். இவர்கள் வடமாகாண நிர்வாகத்திற்குள் உள்வாங்கப்பட உள்ளனர் எஞ்சி உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இருந்து 

ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பில் உள்வாங்கப்பட்டவர்களின் 427 பேரை வட மாகாணத்திற்கு அனுப்புவதற்கு உரிய நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வட மாகாணத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு இந்த வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுங்கள் ஆளுநர் முன் வர வேண்டும் மாகாண சபையில் உருவாக்கப்பட்ட பிரமாணத்துக்கு அமைவாக 

வடக்கு மக்களுக்கு உரித்தான ஒன்றை வேறு மாகாணத்தவர்களுக்கு வழங்கி மூன்றும் மீண்டும் நீதிமன்றத்தை நாடும் சூழலை ஏற்படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.