யாழ்.மாவட்டத்தில் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி பொதிகள் வழங்கல்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி பொதிகள் வழங்கல்..!

யாழ்.மாவட்டத்தில் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக அரிசி பொதி வழங்கும் நிகழ்வு இன்று காலை நல்லுார் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. 

அரசாங்கத்தின் 2022/2023 பெரும்போக நெல் கொள்வனவு நெல் கையிருப்பு அகற்றல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த அரிசிப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மொத்தமாக ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 282 நபர்களுக்கு 12 லட்சத்து 32 ஆயிரத்து 820 கிலோ அரிசி வழங்கப்பட உள்ள நிலையில், 

நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் 10 ஆயிரத்து 375 நபர்களுக்கு ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 750 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகின்றது.

இன்றைய நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன்(காணி), 

நல்லூர் பிரதேச செயலாளர் எழிலரசி அன்ரன் யோகநாயகம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு