SuperTopAds

யாழ்.நாவலர் மண்டபத்தை அபகரிக்க சதியா? ஆளுநர் விளக்கம், மாநகரசபை ஆணையாளருக்கு எதிராக கொள்ளுப் பேரன் ஆளுநருக்கு கடிதம் அனுப்பினாராம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவலர் மண்டபத்தை அபகரிக்க சதியா? ஆளுநர் விளக்கம், மாநகரசபை ஆணையாளருக்கு எதிராக கொள்ளுப் பேரன் ஆளுநருக்கு கடிதம் அனுப்பினாராம்...

யாழ்.நாவலர் வீதியில் உள்ள நாவலர் மண்டபத்தில் இருந்து எதிர்வரும் ஏப்ரல் 6ஆம் திகதிக்கு முன்னர் யாழ்.மாநகர சபையினை வெளியேறுமாறு வடமாகாண ஆளுநரின் செயலாளரினால் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

நாவலர் மண்டபம் யாழ்.மாநகர சபையால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மத்திய அரசாங்கத்தின் கீழுள்ள இந்து கலாசார அமைச்சு குறித்த மண்டபத்தினை தங்களிடம் ஒப்படைக்குமாறு பல தடவைகள் கோரிக்கைகள் விடுத்தபோது 

அது பல தடவைகள் யாழ்.மாநகரசபை அமர்வுகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது 45 மாநகரசபை உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்தின் பிரகாரம் குறித்த விடயம் நிராகரிக்கப்பட்டதுடன் 

எக் காரணம் கொண்டும் மத்திய அரசாங்கத்திடம் அதனைக் கையளிக்க மாட்டோம் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதன் பிற்பாடு இந்து கலாசார அமைச்சும் யாழ்.மாநகர சபையும் இணைந்து குறித்த மண்டபத்தினை நிர்வகிப்பது 

தொடர்பில் இந்து கலாசார அமைச்சினால் வழங்கப்பட்ட வரைபு தொடர்பாக சபையில் விவாதிக்கப்பட்டு உறுப்பினார்களினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் இந்து கலாசார அமைச்சுக்கு அறிவித்து அதனை நிர்வகிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. 

யாழ்.மாநகர சபையின் முதல்வராக வி. மணிவண்ணன் பணிபுரிந்த காலத்தில் குறித்த மண்டபம் தனியார் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்டது அத்துடன் சைவமகா சபையின் அனுசரணையுடன் 

ஆறுமுகநாவலரின் சிலையினை யாழ்.மாநகரசபை நிறுவியிருந்தது. அத்துடன் குறித்த மண்டபத்தினை புனரமைப்பதற்கு இந்து கலாசார அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதி யாழ்.மாநகர சபையின் வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டு 

யாழ்.மாநகர சபையினால் கோள்விகோரப்பட்டு குறித்த பணிகள் யாழ்.மாநகர சபையினாலேயே மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தற்போது உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் 

எதிர்வரும் ஏப்ரல் 6ஆம் திகதிக்கு முன்னர் நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ் மாநகர சபையை வெளியேறுமாறும் அதன் பிற்பாடு இந்து கலாசார அமைச்சுடன் கலந்துரையாடி நடவடிக்கைமேற்கொள்ளுமாறும் ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் வழங்கிய பதில்.. 

இது குறித்து ஆளுநரிடம் வினவியபோது நாவலர் மண்டபம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை நடைமுறைப்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளேன். 

நாவலர் மண்டபத்தை இந்துக் கலாச்சார திணைக்களம் மற்றும் யாழ்.மாநகரசபை பராமரிக்கும் சூழல் இருந்தபோதும் அது செய்யப்படவில்லை. 

ஆகவே சம்மந்தப்பட்டவர்களுக்கு உரிய பொறுப்பை வழங்க நடவடிக்கை எடுப்பேன் என கூறியுள்ளார். 

நாவலரின் கொள்ளுப்பேரன் முறைப்பாடாம்..

யாழ்.மாநகர ஆணையாளர் நாவலரை அவமானப்படுத்திவிட்டார். என அவருடைய கொள்ளுப் பேரன் ஆளுநரிடம் முறையிட்டுள்ளாராம். 

நுால் வெளியிட்டு விழா ஒன்றுக்காக ஆணையாளர் நாவலரின் படத்தை அகற்றும்படி கூறியுள்ளார். 

இந்நிலையில் அகற்றப்பட்ட படம் அந்த இடத்தில் அமைக்கப்படவேண்டும் எனவும், அதனை செய்த ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.