யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை சந்தியில் கோர விபத்து! தந்தை பலி, மகள் படுகாயம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை சந்தியில் கோர விபத்து! தந்தை பலி, மகள் படுகாயம்...

யாழ்.வடமராட்சிக் கிழக்கு குடத்தனைச் சந்தி பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். மேலும் உயிரிழந்தவரின் படுகாயம் அடைந்துள்ள நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுஅம்மன் பகுதியிலிருந்து மணல் ஏற்றிக் கொண்டு பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பார ஊர்தியும், பருத்தித்துறை பகுதியிலிருந்து மருதங்கேணி நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. 

இதில் மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்றவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பலியானவர் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியை சேர்ந்த சின்னையா கணேசன் சிங்கம் (44)என தெரிவிக்கப்படுகிறது.

அவரோடு கூட வந்த பெண் பிள்ளை(மகள்) தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாரதி கைது செய்யப்பட்டதுடன் விசாரணைகளை பருத்தித்துறை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு