வடமாகாண பாடசாலைகளில் நாளை சீருடை மற்றும் பாடப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு...

ஆசிரியர் - Editor I
வடமாகாண பாடசாலைகளில் நாளை சீருடை மற்றும் பாடப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு...

வடமாகாணத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான இலவச பாடநூல் மற்றும் சீருடை விநியோகம் நாளை 23 ஆம் திகதி வியாழக்கிழமை வைபவரீதியாக ஆரம்பிக்கப்பட உள்ளதாக வடமாகாண ஆளுநரின் செயலாளர் பொ.வாகீசன் தெரிவித்தார்.

வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 13 வலையங்களில் ஒவ்வொரு வலையத்திலும் இருந்து ஒரு பாடசாலை குறித்த ஆரம்ப நிகழ்வுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

தற்போது ஏற்பட்டுள்ள உற்பத்திச் செலவின் அதிகரிப்பை கருத்தில் கொண்டு 60 வீதமான புதிய புத்தகங்களும் 30 வீதமான நல்ல நிலையில் உள்ள பாவித்த புத்தகங்களும் வழங்கப்பட உள்ளது.

அதேபோல சீனக் குடியரசினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 70 வீதமான சீருடைத் துணிகளும் 30 வீதமான இலங்கையில் தயாரிக்கப்பட்ட உள்ளூர் உற்பத்தி துணிகளும் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு