ஆளுநரின் ஒப்புதல் கிடைத்ததும் நடவடிக்கை! வடமாகாண ஆசிரியர் இடமாற்றம் குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்ட அறிவிப்பு...

ஆசிரியர் - Editor I
ஆளுநரின் ஒப்புதல் கிடைத்ததும் நடவடிக்கை! வடமாகாண ஆசிரியர் இடமாற்றம் குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்ட அறிவிப்பு...

வடமாகாணத்திலுள்ள ஆசிரியர் இடமாற்றங்களில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக ஆளுநரின் ஒப்புதல் கிடைத்ததுடன் ஆராயப்பட்டு ஒழுங்குபடுத்தப்படும். என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அருளானந்தம் உமாமகேஷ்வரன் கூறியுள்ளார். 

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வடமாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

வடமாகாண ஆசிரியர்கள்களின் இடமாற்றம் தொடர்பில் நிலையான ஒரு கொள்கை வகுக்கப்படவில்லை. இதன் காரணமாக வெளி மாவட்டங்களில் பல வருடங்களாகக் கடமை ஆற்றும் ஆசிரியர்கள் தமது மாவட்டங்களுக்கு திரும்ப முடியவில்லை.

வடமாகாண கல்வி அமைச்சு வடக்கு ஆசிரியர் இடமாற்றங்களை ஒழுங்குபடுத்துவதற்காக ஆசிரிய இடமாற்றக் கொள்கை ஒன்றை தயாரித்து ஆளுநரின் அனுமதிக்காக சமர்ப்பித்துள்ளோம்.

ஆளுநரின் அனுமதி கிடைத்ததும் வடக்கு ஆசிரியரிடம் இடமாற்ற நடைமுறையை ஒழுங்குபடுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு