யாழ்.தென்மராட்சியில் பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய விவகாரம்! ஒருவர் பொலிஸாரிடம் சரண், மற்றொரு பொலிஸ் உத்தியோகஸ்த்தர் தலைமறைவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.தென்மராட்சியில் பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய விவகாரம்! ஒருவர் பொலிஸாரிடம் சரண், மற்றொரு பொலிஸ் உத்தியோகஸ்த்தர் தலைமறைவு..

பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தப்பட்ட சம்பத்துடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரிடம் சரணடைந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிள் உரிமையாளரான பொலிஸ் உத்தியோகஸ்த்தர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் சகோதரனான மற்றொரு பொலிஸ் உத்தியோகஸ்த்தர் தலைமறைவாகியுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கடந்த வாரம், யாழ்.தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியில் கொடிகாமம் பொலிஸார் மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனையிட்டபோது 16 கிலோ கஞ்சா மீட்கப்பட்டது. 

இதன்போது, அதைக் கொண்டு வந்தவர் தப்பிச் சென்றிருந்தார். சில தினங்களில் பின்னர் குறித்த நபர் யாழ்ப்பாணம் பொலிஸில் சரணடைந்திருந்தார். அதனையடுத்து, குறித்த சந்தேக நபரின் வங்கி கணக்கை பரிசீலித்தபோது பெரும் தொகை பணப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டதேடு, 

குறித்த சந்தேகநபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மன்னாரில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரது எனவும் கண்டறியப்பட்டது. அதனை அடுத்து சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

அதனையடுத்து, மோட்டார் சைக்கிள் உரிமையாளரான பொலிஸ் உத்தியோகத்தரை கொடிகாமம் பொலிஸார் கைது செய்து சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர் படுத்தியதோடு, 3 நாட்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்கவும் அனுமதி பெற்றனர். 

இந்நிலையில், குறித்த மோட்டார் சைக்கிளை கடந்த 10 வருடங்களாக சுண்ணாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தனது சகோதரனே பயன்படுத்தி வருவதாக கைதான பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை மீண்டும் நேற்று நீதிமன்றில் ஆஜர் படுத்தியபோது 

நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்துள்ளது. இதேவேளை சுண்ணாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு