யாழ்ப்பாணம் சிங்கள மகா வித்தியாலய கட்டிடத்தை இராணுவத்திற்கு தாரைவார்த்த வடமாகாண கல்வி அமைச்சு! வடமாகாண ஆளுநரின் உத்தரவும் காற்றில் பறந்தது...
யாழ்ப்பாணம் சிங்கள மகா வித்தியாலயத்தை கட்டிடத்தை ராணுவத்துக்கு கை மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் வடமாகாண கல்வி அமைச்சு - மத்திய கல்வி அமைச்சுடன் இணைந்து ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வடமாகாண மகளிர் விவகார அமைச்சு, வடமாகாண விவசாய அமைச்சு, யாழ்ப்பாணம் கால்நடை மருத்துவமனை, வடமாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு என பல அரச நிறுவனங்கள் சொந்த கட்டிடம் இன்றி
பல ஆண்டுகாலமாக தனியார் வீடுகளில் இயங்கி வருகின்றன இவை ஒவ்வொன்றுக்குமான மாத வாடகை ஒரு லட்சத்துக்கும் மேல் தனியார் வீட்டு உரிமையாளர்களால் அளவிடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் குறித்த நிறுவனங்களை அரச கட்டிடங்களுக்கு மாற்றுமாறு ஆளுநரால் கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுருந்தது மேலும் உடனடியாக யாழ்ப்பாணத்தில் இயங்காத நிலையில் உள்ள பாடசாலை கட்டிடங்களை குறித்த திணைக்களின் பயன்பாட்டுக்கு வழங்குமாறு கல்வி அமைச்சுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும் திருத்தவே முடியாதபடி மிகவும் மோசமான நிலையில் இருந்த ஓரிரு பாடசாலை கட்டிடங்களின் விவரத்தை வெளியிட்ட வடமாகாண கல்வி அமைச்சர் யாழ்ப்பாணம் நகர மத்தியில் படையினர் வலு கட்டாயமாக கையகப்படுத்தியுள்ள சிங்கள மகா வித்தியாலய கட்டடத்தில் தொடர்பில் மௌனம் சாதித்து வந்தது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் சிங்கள மகா வித்தியாலய கட்டிடத்தை முழுமையாக இராணுவத்திற்கு கைமாற்றுவதற்கான நடவடிக்கைகளில் வடமாகாண கல்வித் திணைக்களம் மத்திய கல்வி அமைச்சுடன் இணைந்து ஈடுபட்டிருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.
யாழ்ப்பாணம் கல்வி வலயத்தின் கீழ் உள்ள சிங்கள மகா வித்தியாலயம் நீண்ட காலம் இயங்காத நிலையில் இருந்தபோதும் 1995 ஆம் ஆண்டு படையினர் குடாநாட்டை கைப்பற்றிய பின் ராணுவ 512 ஆவது பிரிகேட் படை முகமாக செயற்பட்டு வருகின்றது.
தற்போது முகாமாக இயங்கும் பாடசாலை கட்டிடத்தை இராணுவத்தினருக்கே நிரந்தரமாக கையளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு கோரியதன் பெயரில் சுற்றுலா மற்றும் காணி அமைச்சு பாடசாலையை கையளிக்குமாறு மத்திய கல்வி அமைச்சை எழுத்தில் கோரியுள்ளது.
இது தொடர்பில் மத்திய கல்வி அமைச்சர் வடமாகாண கல்வி அமைச்சின் சம்மதத்தை கோரியபோது சிங்கள மகா வித்தியாலய கட்டிடத்தை இராணுவத்தினருக்கு வழங்குவதில் தாராளம் காட்டிய வடமாகாண கல்வி அமைச்சு
குறித்த பாடசாலை கட்டிடத்தை படையினருக்கு நிரந்தரமாக வழங்குவதற்கு தமது ஆட்சபனை இல்லை என எழுத்து மூலம் பதில் அளித்துள்ளது. இதன் மூலம் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள சிங்கள மகா வித்தியாலய கட்டிடம் ராணுவத்தினருக்கு நிரந்தரமாக வழங்கப்பட உள்ளது.