SuperTopAds

காணி சுவீகரிப்பு வர்த்தமானி அறிவித்தலை மீள பெறாவிட்டால் 29 ஆம் திகதி பாரிய போராட்டம்

ஆசிரியர் - Editor II
காணி சுவீகரிப்பு வர்த்தமானி அறிவித்தலை மீள பெறாவிட்டால் 29 ஆம் திகதி பாரிய போராட்டம்

வடக்கின் கரையோர பிரதேச காணிகளை அரசுடமையாக்கும் வர்த்தமானி அறிவித்தலை மீள பெறாவிட்டால் 29 ஆம் திகதி பாரிய போராட்டம் நடத்தப்படும் என இலங்கை தமழ் அரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழில். நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

''வடக்கின் கரையோர பிரதேசங்களில் வாழுகின்ற மக்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டும், பலதடைவைகள் இடம்பெயர்ந்த காரணத்தாலும் தமது காணிகளுக்கான ஆவணங்களை இழந்துள்ளனர். சிலர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இந்நிலையில் அவர்களது காணிகளை அரசுடமையாக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பழமையான இந்த சட்டம்  பிரயோகிக்கப்படக்கூடாது. இந்த வர்த்தமானி பிரசுரம் உடனடியாக மீள பெறவேண்டும் என்று நாங்கள் கூறி இருக்கிறோம்.

அப்படி மே மாதம் 28 ஆம் திகதிக்கு உள்ளே இது மீளப்பெறாவிட்டால், நாங்கள் பாரியதொரு போராட்டத்தை அரசாங்கத்திற்கு எதிராக நடாத்துவோம் என ஏற்கனவே தெரிவித்திருக்கிறோம். அதன்படி மே மாதம் 29 ஆம் திகதி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்படும் என மேலும் தெரிவித்தார்  .