மல்லாகம் குளமங்கால் படுகொலை திட்டமிடப்பட்டதா?: சந்தேகம் எழுப்பும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

ஆசிரியர் - Admin
மல்லாகம் குளமங்கால் படுகொலை திட்டமிடப்பட்டதா?: சந்தேகம் எழுப்பும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

மல்லாகம் குளமங்கால் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இன்னொரு பகுதிக்குச் செல்லவில்லை. வேறு கிராமத்தைச் சேர்ந்தவர்களே அப்பகுதிக்கு வருகை தந்து குழப்பம் ஏற்படுத்தினர். இவ்வாறானதொரு நிலையில் குறித்த பகுதியில் தாக்குதல் நடாத்த வந்தவர்களிடமிருந்து தமது கிராமத்தைச் சேர்ந்த இளைஞரொருவரைக் காப்பாற்ற முயன்றவரைப் பொலிஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. திட்டமிட்ட ரீதியில் இந்தப் படுகொலை இடம்பெற்றிருக்கின்றதா? என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை(21) பிற்பகல் எமது செய்திச் சேவைக்கு விசேடமாகக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு சந்தேகங்கள் எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மல்லாகம் சகாயா மாதா கோயிலடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சம்பவம் வேறு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தேடி வந்து குறித்த தேவாலயத்தில் குழப்பம் ஏற்படுத்த முயன்றமையின் விளைவே. அங்கிருந்த வேறொருவர் மீது தாக்குதல் நடாத்த முற்பட்ட போது அதனை உயிரிழந்த இளைஞர் தடுக்க முற்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அங்கு திடீரென வந்த பொலிஸ் அங்கு நின்ற இளைஞரொருவரைச் சுட முற்பட்டுள்ளார். அப்போது குறித்த இளைஞரைச் சுட வேண்டாம் என உயிரிழந்த இளைஞன் தடுக்க முற்பட்ட நிலையிலேயே அவரை நோக்கிப் பொலிஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

எனவே, குறித்த இளைஞரின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரியை உடனடியாகக் கைது செய்து இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக முழுமையானதொரு விசாரணையை நடாத்த வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு