யாழ்.வலி,கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் மற்றும் அவரது மனைவி மீது சரமாரி வாள்வெட்டு! நகைகளை அறுக்கவும் முயற்சி..

ஆசிரியர் - Editor I
யாழ்.வலி,கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் மற்றும் அவரது மனைவி மீது சரமாரி வாள்வெட்டு! நகைகளை அறுக்கவும் முயற்சி..

யாழ்.வலி,கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் செல்வராசா மற்றும் அவருடைய மனைவி மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. 

சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

மேற்படிச் சம்பவம் நேற்று (16) இரவு 8.30 மணி அளவில் கோப்பாய், மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

பிரதேச சபை உறுப்பினரும் அவரது மனைவியும் ஆலய திருவிழாவில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது 

அவர்களை பின்தொடர்ந்த மூவர் அவர்களின் வீட்டிற்கு முன்பாக வழிமறித்து மனைவி அணிந்திருந்த தங்க நகைகளை அறுக்க முற்பட்டுள்ளனர். 

இதன்போது பிரதேசசபை உறுப்பினரும் மனைவியும் நகைகளை அறுப்பதை தடுக்க முற்பட்ட பொழுது அவர்கள் இருவர் மீதும் வாளால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதையடுத்து அங்கு திரண்டவர்கள் இருவரையும் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு