SuperTopAds

யாழ்.உரும்பிராய் சிறுவர் இல்லத்திலிருந்து சிறுமிகள் காணாமல்போன விவகாரம், உண்மையில் நடந்தது என்ன?

ஆசிரியர் - Editor I
யாழ்.உரும்பிராய் சிறுவர் இல்லத்திலிருந்து சிறுமிகள் காணாமல்போன விவகாரம், உண்மையில் நடந்தது என்ன?

யாழ்.உரும்பிராய் பகுதியில் இயங்கும் கருணை இல்லம் சிறுவர் இல்லத்திலிருந்து காணாமல்போன சிறுமிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிலையில், 

குறித்த இல்லத்தை விட்டு சிறுமிகள் வெளியேறியது சந்தேகங்களை ஏற்படுத்துவதாக அமைவதாகப் பொலிஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இல்லத்தை கட்டிய உரும்பிராயைச் சேர்ந்த தனவந்தர் யாழ்ப்பாணத்தில் எங்குமில்லாதவாறு வசதி வாய்ப்புகளுடன் குறித்த இல்லத்தை அமைத்துக் கொடுத்தார்.

அவ்வாறு அமைத்துக் கொடுத்தவர் இல்லத்தில் வாழும் பிள்ளைகளுக்காக பாரிய ஒரு நிதியினையும் வங்கியில் நிலையாக வைப்புச் செய்துள்ளார். 

தனது பெயரில் இருந்த குறித்த இல்லத்தினை தான் மறைந்த பின்னர் தனது குடும்ப உறுப்பினர்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது என்பதற்காக 

இறப்புக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே அதனை சமூக நிறுவனம் ஒன்றின் பெயரில் அறுதி எழுதி கொடுத்தார் கருணை இல்லத்தில் தாய் தந்தையை இழந்த 

வறுமைக் கோட்டுக்குள் வாழும் பிள்ளைகளை அனுமதித்துவந்த நிலையில் பின்னர் பள்ளிப் பருவத்தில் தவறான நடத்தைகளில் ஈடுபட்ட பெண் பிள்ளைகள், 

பாடசாலையில் கற்கும்போதே வீட்டை விட்டு ஓடியவர்கள் என பலரையும் நீதிமன்ற அனுமதியுடன் இல்லத்தில் அதிகாரிகளின் கோரிக்கையின் பிரகாரம் அனுமதித்தார்கள். 

சமூகப் பிறழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை மறுவாழ்வு அளிப்பதற்கான உயரிய நோக்கத்துடன் குறித்த இல்லம் அவர்களை அரவணைத்தாலும் 

இல்லத்தில் தங்கியிருந்து அங்கு உள்ளவர்களையும் தவறான பாதையில் கொண்டு செல்லும் நடவடிக்கை சிலர் மேற்கொண்டனர். 

ஏற்கனவே குறித்த இல்லத்தில் வசிக்கும் சில பெண்களுக்கு நெருக்கமான ஆண்கள் மதில் மேலாக தொலைபேசிகளை எறிவதும் 

சிம் அட்டைகளை எறிவதும் தொடர்கதையாக இருந்தது. இவ்வாறான ஒரு நிலையில் நேற்றைய தினம் குறித்த இல்லத்தில் இருந்து 

மூன்று மாணவிகள் காணாமல்போனதாக இல்லத்தால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்த சிறுமிகள் பருத்தித்துறை பகுதியில் வைத்து மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட சிறுமிகள், சிறுவர் இல்லத்தில் வசிப்பதற்கு விருப்பமில்லை என பொலிஸாருக்கு கூறியுள்ளனர்.

எனினும் குறித்த மூன்று மாணவிகளையும் சிலர் அழைத்துச் சென்றதாக தாம் சந்தேகிப்பதாகவும் ஆனால் குறித்த இல்லம் முறைப்பாட்டை வாபஸ் பெற்ற நிலையில் அது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கவில்லை 

என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.