யாழ்.பலாலி வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பாக றாகாம கள ஆய்வு!

ஆசிரியர் - Editor I
யாழ்.பலாலி வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பாக றாகாம கள ஆய்வு!

யாழ்.பலாலி பகுதியில் கடந்த மாதம் 3ஆம் திகதி 108 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்காலிக முகாம்களில் வசித்துவரும் குடும்பங்களின் மீள் குடியேற்றத்துக்கு திட்ட முன்னெடுப்புக்களை யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச செயலகம் முன்னெடுத்து வருகிறது. 

இந்நிலையில் பலாலி பகுதிகளில் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் பார்வையிடும் முகமாகவும் தற்காலிக வீட்டுத் திட்டங்களை வழங்குவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கும் றகாமா நிறுவனமும் நோர்வேயை தளமாகக் கொண்டு இயங்கும் போரூட் நிறுவனமும் இணைந்து 

நேற்று செவ்வாய்க்கிழமை (14) மாலை கள விஜயம் மேற்கொண்டிருந்தனர்.தற்காலிக நலன்புரி முகாம்களில் தங்கியிருக்கும் மக்களின் மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்தும் முகமாகவும் மீள்குடியேற்ற மக்களின் வாழ்வாதாரம் 

மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் முகமாகவும் பிரதேச செயலகத்துடன் இணைந்து அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதார உதவிகளை மேற்கொள்வதற்கான மேற்பார்வை விஜயமாக இது ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. 

இதன்போது வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் சிவசிறி, றகாமா நிறுவன பணிப்பாளர் மரிக்கார், நோர்வே போரூட் அமைப்பின் திட்ட அமைப்பாளர் அனா, பலாலி கிராமசேவகர் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு