யாழ்.பலாலியில் இறைச்சிக்காக பசுமாடு திருடிய 3 பேர் கைது! 2 பேர் கொழும்பை சேர்ந்தவர்களாம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.பலாலியில் இறைச்சிக்காக பசுமாடு திருடிய 3 பேர் கைது! 2 பேர் கொழும்பை சேர்ந்தவர்களாம்...

பசு மாடுகளை இறைச்சிக்காக திருடிச் சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி DLA நயனஜித் தெரிவித்தார்.

நேற்று இரவு 7.30 மணியளவில் வளலாய் விமான நிலைய வீதியில் ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்தபொழுது வாகனம் ஒன்று மறித்து சோதனையிடப்பட்டது.

இதன்போது ஐந்து மாடுகளை சிறிய வண்டியில் மிகவும் கொடூரமாக அடைக்கப்பட்டு திருட்டுத்தனமாக இறைச்சிக்காக எடுத்து சென்றமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கடத்தல் வாகனத்தையும், மாடுகளையும் கைப்பற்றிய பொலிஸார் 3 சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களில் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த இரண்டு பேரும் அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதன் போது மாடுகள் மிகவும் சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

அண்மை காலமாக வலிகாமம் பகுதிகளில் மாடுகள் திருடப்படும் சம்பவம் அதிகரித்து செல்கின்றமை தொடர்பில் நாங்கள் சுட்டிக் காட்டி இருந்தோம்.

இந்நிலையில் பலாலி பொலிஸார் இரவு நேர தற்பொழுது ரோந்து கடமையை அதிகரித்துள்ளனர்.

இதன் அடிப்படையிலேயே நேற்று இவ்வாறு திருட்டுத்தனமாக பசுமாடுகள் இறைச்சிக்காக எடுத்துச் சென்றமை கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கையில் பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ஷ, பொலிஸ் அப்துல்லா, பொலிஸ் கொஸ்தாபிள்களான 82528 கமகே, 92192 திலகரட்ன, 

77420 அத்தநாயக்க ஆகியோர் உடனிருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு