வீட்டைவிட்டு ஓடி தற்கொலைக்கு முயன்ற மொறட்டுவ பல்கலைகழக மாணவன், யாழ்.தெல்லிப்பழையில் மீட்பு! பகிடிவதையால் நடக்க இருந்த பயங்கரம்...

ஆசிரியர் - Editor I
வீட்டைவிட்டு ஓடி தற்கொலைக்கு முயன்ற மொறட்டுவ பல்கலைகழக மாணவன், யாழ்.தெல்லிப்பழையில் மீட்பு! பகிடிவதையால் நடக்க இருந்த பயங்கரம்...

மொறட்டுவ பல்கலைகழகத்தில் கல்வி பயிலும் யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவன் பகிடிவதையினால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார். 

வறுமையான குடும்பப் பின்னணியி லிருந்து மொறட்டுவ பல்கலைக்கழகத் துக்குத் தெரிவான 23 வயதான மாணவனே பகிடிவதைக் கொடுமையால் இவ்வாறான ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளான்.

சிரேஷ்ட மாணவர்கள் தினமும் இரவு 6 மணி தொடக்கம் 10 மணி வரையில் தொலைபேசியில் தங்களுடன் கதைக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளனர். அத்துடன் சிரேஷ்ட மாணவர்களுக்கு மரியாதை செலுத்துவேன் என்று ஆயிரம் தடவை எழுதித் தருமாறும் பணித்துள்ளனர். 

இவ்வாறான பகிடிவதைக் கொடுமைகளுக்கு மேலதிகமாக, விடுமுறையில் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த சிரேஷ்ட மாணவர்கள் இருவர் இந்த மாணவனை அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து பல்கலைக்கழகத்துக்குச் செல்லமாட்டேன் என்று வீட்டிலிருந்தவர்களிடம் மாணவன் தெரிவித்துள்ளான். வீட்டார் பல்கலைக்கழகத்துக்குச் செல்லுமாறு கட்டாயப்படுத்தியதையடுத்து யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து மாணவன் வெளியேறிச் சென்றுள்ளான். 

காங்கேசன்துறை கடற்கரைப் பகுதியில் 2 நாள்களும், அதன் பின்னர் தெல்லிப்பழை பகுதியிலுள்ள பாழடைந்த வீட்டில் 2 நாள்கள் தனித்திருந்துள்ளான். பாழடைந்த வீட்டுக்கு அருகிலிருப்பவர்கள், மாணவன் தனித்து அங்கு தங்கியிருந் தமையைக் கண்டு பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். 

அதற்கிடையில் வீட்டார், மாணவனைக் காணவில்லை என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து கோப்பாய் பொலிஸாரால் மீட்கப்பட்ட மாணவன் மருத்துவப் பரிசோதனைக்காக 

யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளான்.மாணவனது கழுத்திலும், கைகளிலும் வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு