யாழ்ப்பாணத்தில் 9 லட்சம் பெறுமதியான தங்க நகையை திருடிய குற்றச்சாட்டில் கைதான பெண் உட்பட இருவருக்கு விளக்கமறியல்!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் 9 லட்சம் பெறுமதியான தங்க நகையை திருடிய குற்றச்சாட்டில் கைதான பெண் உட்பட இருவருக்கு விளக்கமறியல்!

9 இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்தரைப் பவுண் தங்க நகையை திருடிய பெண் உட்பட இருவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீலிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.

நேற்று முன்தினம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நுணசை சிவன் கோவிலில் நடந்த உற்சவத்தில் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியில் வந்த மூவர் கொண்ட குழு இந்த திருட்டை நடத்தியது. 

இந்நிலையில் திருட்டு சம்பவம் குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. 

அதனடிப்படையில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட இளவாலை பொலிஸார் இருவரைக் கைது செய்துள்ளதுடன் ஒரு பெண் தலைமறைவாகியுள்ளார். 

கைதான இருவரும் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் என அறிய முடிகிறது. இதன்போது திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டன. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அ

வர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு