SuperTopAds

யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா ஒழுங்குகள் பூச்சியம்! 3 கூட்டங்கள் நடத்தி வாயால் வடைசுட்ட யாழ்.மாவட்டச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள்...

ஆசிரியர் - Editor I
யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா ஒழுங்குகள் பூச்சியம்! 3 கூட்டங்கள் நடத்தி வாயால் வடைசுட்ட யாழ்.மாவட்டச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள்...

யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவு ஒழுங்கமைப்புக்காக யாழ்.மாவட்டச் செயலகத்தில் 3 கூட்டங்கள் நடைபெற்றபோதும், எந்தவொரு வசதியும் திருப்தியளிப்பதாக இல்லை என பக்தர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

கச்சதீவு உற்சவத்தின்போது பயண ஒழுங்குகள், குடிநீர், மலசல கூடம் போன்ற வசதிகளை உரிய முறையில் பக்தர்களுக்கு செய்து கொடுக்கப்படவில்லை என அங்கு சென்ற பலராலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

கச்சதீவு பெருநாளுக்கு அதிகளவிலான பக்தர்கள் வருவார்கள் என தெரிந்தும் மலசலகூடப் பராமரிப்பு முறையாக அமையவில்லை. இந்நிலையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்கென படகு ஒன்று ஒதுக்கப்படுவதாகவும் 

மேலும் பெறுமதி வாய்ந்த ஊடக சார் உபகரணங்களை வைத்திருக்கும் ஊடகவியலாளர்களுக்கு கூடாரம் வழமையாக வழங்கபடுவது வழமை. இருந்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை காலை 6:30 மணிக்கு 

மாவட்ட செயலகத்தில் அறிவித்ததைபோன்று ஊடகவியலாளர்கள் அழைத்து செல்லப்பட்ட நிலையில் ஊடகவியலாளர்களுக்கு அமைக்கப்பட்ட கூடாரத்தில் இலங்கை கடற்படையின் ஊடக பிரிவு தங்கியிருந்து. 

குறித்த இரு கூடாரமும் ஊடகம் என சுட்டிகாட்டியிருந்த நிலையில் மாவட்ட செயலகம் சார்பில் ஊடகத்திற்கு பொறுப்பான எவரும் வருகைதராத நிலையில் கடும பிரயத்தனத்திற்கு மத்தியில் தமக்கனெ இடத்தை பெற்றுக்கொண்டனர்.

அதுமட்டுமல்லாது யாழ்.இந்திய துணை தூதர் குழுவினர் கச்சதீவுக்கு சென்ற நிலையில் அவர்களுக்கு குளிப்பதற்கு ஏற்ற ஒழுங்குகள் செய்து கொடுக்காமல் குடிப்பதற்கு கொண்டு சென்ற நீரின் முகத்தை கழுவி 

 பூசையில் கலந்து கொண்டதாக அறியக் கிடைத்தது யாழில் இருந்து கச்சைதீவு வரும் பொழுது மாவட்ட செயலகத்தில் இருந்து அழைப்பெடுத்து வாருங்கள் என தெரிவித்தவர்கள் மீள ஊடகவியலாளர்கள் திரும்புவதற்கு அழைப்பும் எடுக்கவில்லை. 

ஒழுங்கமைப்பும் செய்யவில்லை. இந்நிலையில் மாவட்ட செயலகம் கைவிட்ட நிலையில் கடற்படை அதிகாரிகளுக்கு தெரியபடுத்திய நிலையிலும் தென்னிலங்கையில் இருந்து வருகை தந்த சுமார் 15 இற்கும் மேற்பட்ட சிங்கள ஊடகவியலாளர்களை 

கடற்படை விசேட படகுகளில் அனுப்பினர். தமது உயர் அதிகாரிகளினது பிள்ளைகள் மற்றும் கடற்படையினரையும் அனுப்பிய நிலையில் சுமார் மூன்று மூன்று மணித்தியாலமாக கச்சைதீவு கடற்கரையில் 

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த 10 ஊடகவியலாளர்கள் காவல் இருந்த நிலையில் இது குறித்து யாழ்.மறைமாவட்டத்தின் பங்கு தந்தையான வண ஜெபரட்ணம் அவர்களிடம் தெரியபடுத்தபட்டது.

பின்னர் கச்சதீவிலிருந்து நெடுந்தீவிற்கு படகு மூலம் சென்று அங்கிருந்து  குறிகாட்டுவான் வர நேர்ந்தது. ஆகவே கடந்த காலங்களில் மாவட்ட செயலகத்தினால் கச்சதிவு உற்சவத்துக்கு முறையான ஒழுங்கமைப்புகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் 

இம்முறை ஏற்பாடுகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.