மீண்டும் பூ சின்னத்தை பிரபலப்படுத்தும் முயற்சியில் ஈபிஆர்எல்எப்!

ஆசிரியர் - Admin
மீண்டும் பூ சின்னத்தை பிரபலப்படுத்தும் முயற்சியில் ஈபிஆர்எல்எப்!

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப்) மீண்டும் தனது கட்சி சின்னமான பூ சின்னத்தை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற்றிருந்த சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப், கூட்டமைப்பு தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கடந்த உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னதாக த.தே.கூட்டமைப்பில் இருந்து விலகியிருந்தது.

இதன்பின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து கூட்டு அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றிருந்தது.இதன்போது கட்சி சின்னமாக எதனைப் பயன்படுத்துவது என்ற முரண்பாட்டின் காரணமாக அந்த கூட்டு உருவாக்கப்படவில்லை. இருவரும் வேறு வேறு கூட்டுக்களையே அமைத்திருந்தனர்.

இதனடிப்படையில், கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து அதன் உதயசூரியன் சின்னத்தில் ஈபிஆர்எல்எப் போட்டியிட்டு இருந்தது.இருப்பினும் தேர்தல் முடிந்து சில மாதங்கள் கடந்துள்ள நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடனான உறவுகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

மாகாணசபை தேர்தல் வரவிருக்கும் தனது கட்சி சின்னமான பூவினை மீண்டும் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தும் வேலையில் ஈபிஆர்எல்எப் ஈடுபட்டுள்ளது.அதன் ஒரு கட்டமாக ஈபிஆர்எல்எப்பின் மறைந்த தலைவர் தோழர் பத்மநாவாவின் தியாகிகள் தினத்தை முன்னிட்டு அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ள சுவரொட்டிகளில் பூ சின்னம் அச்சிடப்பட்டு பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு