SuperTopAds

யாழ்.மாநகரசபை பிரதி முதல்வருக்கு ஆளுநர் வழங்கியுள்ள அனுமதி!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபை பிரதி முதல்வருக்கு ஆளுநர் வழங்கியுள்ள அனுமதி!

யாழ்.மாநகர முதல்வர் பதவி இழந்ததால் தற்போது பிரதி முதல்வர் கடமைகளை செய்துவரும் நிலையில் 8 வகையான செலவீனங்களை வழங்குவதற்கு பிரதி முதல்வர் துரைராஜா ஈசனுக்கு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அனுமதி வழங்கியுள்ளார். 

இந்த அனுமதி 01/03/2023 தொடக்கம் 14/03/2023 வரையும் நடைமுறையில் இருக்கும். அதற்குள் புதிய முதல்வர் தொிவு செய்யப்பட்டு வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டால் அத்தோடு அந்த அனுமதி வலிதற்றதாக கருதப்படும். 

அவ்வாறு நிகழாவிட்டால் 2023ம் ஆண்டு நிறைவடையும் வரை பிரதி முதல்வருக்கு வழங்கப்பட்டிருக்கும் 8 செலவீனங்களை செய்வதற்கான அனுமதி வலிதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன்படி சம்பளங்களும் படிகளும், வழக்கல் பொருட்களும் தேவைப் பொருட்களும், பயணப் படிகள், தொலைத் தொடர்பு மற்றும் பயன்பாட்டு சேவைகள், பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு, வட்டி கொடுப்பனவுகள், 

சபை ஓய்வூதியக் கொடுப்பனவு மற்றும் இலங்கை வங்கி குத்தகை ஆகியவற்றுக்குரிய செலவீனங்களை வழங்குவதற்கான அதிகாரம் பிரதி முதல்வருக்கு ஆளுநரால் வழங்கப்பட்டுள்ளது.